SERENDAH TAMIL SCHOOL ISSUE

31/5/19

24/3/19

12/3/19

11/3/19

10/3/19

2/3/19

9/2/19

29/11/18

26/11/18

28/3/18

14/03/2018
 

செரெண்டா தமிழ்ப்பள்ளி எப்போது கட்டப்படும்?இரு முறை பெறப்பட்ட மானியம் என்னவானது?

அடிக்கல் நாட்டு விழா நடந்து பல ஆண்டுகள் கடந்து கிணற்றில் போட்ட கல்லாய் இருக்கும் செரெண்டா தமிழ்ப்பள்ளி எப்போது கட்டி முடிக்கப்படும் எனும் கேள்வி வட்டார பொது மக்களிடமும் பொது இயக்கங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.இப்பள்ளிக்கூடத்தை கட்டுவதற்கு மத்திய அரசும் இரு முறை மானியம் வழங்கியும் பள்ளியின் கட்டுமானப்பணி மட்டும் இன்னும் நிறைவை எட்டாமல் வெறும் காட்சிப்பொருளாய் இருப்பது பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளின் காவலன் என முழங்கும் ம இ கா இப்பள்ளிக்கூட கட்டுமானத்தில் தொடர்ந்து காட்டி வரும் அலட்சியமும் மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் துணைக்கல்வி அமைச்சரும் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ கமலநாதன் இந்த பள்ளி விவகாரமாய் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வ செயல்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனும் புலம்பலும் இங்குள்ள இந்தியர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

மறுசீரமைப்பு செய்யப்பட்ட பள்ளிகளிலும் புதிதாய் இடம் மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளிலும் பெரும் சாதனை செய்து விட்டது போல தரையில் அமர்ந்து மாணவர் நலன் விசாரிப்பது போல போஸ்ட் கொடுக்கும் கமலநாதன் தன் தொகுதியை ஒட்டியுள்ள செரெண்டா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில்; தொடர்ந்து மௌன விரதம் எடுப்பது ஏன் என மக்கள் முனுமுனுக்கிறார்கள்.

செரெண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப்பணி ஆண்டுகள் கடந்து முடிவில்லாம நீடித்துக் கொண்டிருப்பதால் இவ்வட்டாரத்தை சார்ந்த சுமார் 500 இந்திய குடும்பங்களின் பிள்ளைகள் தமிழ் கல்வியை மறந்து மலாய் மற்றும் சீனப்பள்ளிகளில் தங்களின் ஆரம்பக்கல்வியை தொடரும் அவலமும் நேர்ந்துள்ளது என்பது தமிழ் மொழிக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் அடிக்கும் சாவுமணி எனவும் சமூக ஆர்வாலர்கள் எச்சரிக்கிறார்கள்.

நாட்டின் 14வது பொது தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் அடிக்கல் நாட்டு விழா மானியம் என மற்றுமொரு அரசியல் நாடகம் அரங்கேறுமோ என கிண்டல் அடிக்கும் பொது மக்கள் அடுத்த பொது தேர்தலுக்கு முன்னதாக செரெண்டா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் நம்பிக்கையான தகவல் கிட்டுமா எனும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீண்டக்காலமாய் கிடப்பில் கிடக்கும் செரெண்டா தமிழ்ப்பள்ளி தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பொது இயக்கங்களும் சமூக ஆர்வாலர்களும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வரும் நிலையிலும் சம்மதப்பட்டவர்கள் அதனை காதில் போட்டுக் கொள்ளாமல் அலட்சியம் செய்து வருவது வேடிக்கையாக இருப்பதோடு அவர்கள் இன்னமும் இந்திய சமுதாயத்தை வாக்களிக்கும் இயந்திரமாக மட்டும் தான் கருதுகிறார்களா என ஆத்திரமும் வெற்றுப்பின் உச்சத்தை எட்டியுள்ளதை காண முடிகிறது.

இந்த ஆண்டாவது செரெண்டா தமிழ்ப்பள்ளியின் பிரச்னைக்கு விடியல் கிடைக்குமா அல்லது தொடர்ந்து இருள் சூழ்ந்தே இந்திய சமுதாயத்தை விடாமல் துரத்திக் கொண்டிருக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கனும்.பொது மக்களின் கோபம் உச்சத்தை அடைந்து நாட்டின் 14வது பொது தேர்தலில் வெளிப்படுவதற்கு முன்னர் இப்பிரச்னைக்கு விடியலை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதும் ஒரு தரப்பின் சிந்தனையாக இருந்தாலும் அஃது நடக்குமா என்பது கேள்விக்குறியே.


https://flic.kr/p/WrdEVp

Post Author: myinfozon