மலாக்கா முத்துகிருஷ்ணன் – MELAKA MUTHUKRISHNAN –

WEB : http://ksmuthukrishnan.blogspot.my/

10/02/2020 – MONDAY

பத்துமலை வரலாறு – 4
தமிழ் மலர் – 10.02.2020

https://www.facebook.com/myinfozon/posts/2409895622634429


08/02/2020 – saturday

Muthukrishnan IpohYesterday at 12:51

பத்துமலை வரலாறு – 3
தமிழ் மலர் – 08.02.2020
===================
உலகிலேயே மிக நீளமான குகைகள்; மிக ஆழமான குகைகள்; மிக அதிசயமான குகைகள்; அத்தனையும் மலேசியாவில் தான் உள்ளன. அதே போல உலகிலேயே அதிகமான வௌவால் இனங்களும் மலேசியாவில் தான் உள்ளன.
Read More


07/02/2020 – friday

Muthukrishnan Ipoh
7 February at 12:21

பத்துமலை வரலாறு – 2
தமிழ் மலர் – 07.02.2020
===================
1875-ஆம் ஆண்டு வாக்கில் கோலாலம்பூர் ஆற்றோரத்தில் தம்புசாமி பிள்ளை ஒரு மாரியம்மன் வழிபாட்டுத் தலத்தைக் கட்டினார். அது ஒரு சின்னக் கோயில்.

அந்தச் சமயத்தில், அந்த இடத்திலேயே மலாயன் இரயில்வே (Malayan Railway) நிறுவனத்திற்கும் நிலம் தேவைப்பட்டு இருக்கிறது. மதுரைக்கு வந்த சோதனையைப் பாருங்கள்.
Read More


06/02/2020 – thursday

Muthukrishnan Ipoh8 hrs

பத்துமலை வரலாறு – 1
தமிழ் மலர் – 06.02.2020
===================
ஒரு காலத்தில் காட்டு விலங்குகள் புனிதம் பேசிய புண்ணிய மலை. காட்டுப் புலிகள் பாத யாத்திரை பார்த்த புனித மலை. குகை வாழ் கரடிகள் கபடி ஆட்டம் விளையாடிய தீர்த்த மலை.
Read More


02/01/2020 – THURSDAY

ஸக்கீர் நாயக் மேதையா?
தமிழ் மலர் – 02.01.2019

https://www.facebook.com/myinfozon/posts/2373189592971699


01/01/2020 – WEDNESDAY

2020 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

https://www.facebook.com/myinfozon/posts/2372172233073435


31/12/2019 – TUESDAY

கேமரன் மலை இந்தியர்களின் வேதனைகள் – 2
தமிழ் மலர் – 31.12.2019

https://www.facebook.com/myinfozon/posts/2372214176402574


28/12/2019 – SATURDAY

கேமரன் மலை இந்தியர்களின் நெருக்கடிகள்
தமிழ் மலர் – 28.12.2019

https://www.facebook.com/myinfozon/posts/2367297896894202


08/11/2019 – FRIDAY

மலேசியாவில் யார் வந்தேறிகள் – 2
(தமிழ் மலர் – 08.11.2019)

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2316644788626180


08/11/2019 – FRIDAY

ஓர் இந்தியக் குடும்பத்தின் ஐந்தடி வாழ்க்கை
தமிழ் மலர் – 08.11.2019

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2316646645292661


8/10/2019 – TUESDAY

அரசியல் கட்சிகளுக்கு 2 வார காலக்கெடு
(தமிழ் மலர் – 08.10.2019)

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2288467194777273


6/9/2019 – FRIDAY

ஸக்கீர் நாயக்கினால் மலேசியாவுக்கு என்ன நன்மை – ரயிஸ் யாத்திம் கேள்வி

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2263492927274700


31/8/2019 – SATURDAY

பக்காத்தான் ஹராப்பான் நம்பிக்கை சரிகிறது

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2258991034391556


29/8/2019 – THURSDAY

பிரதமர் அந்தச் சொல்லைப் பயன்படுத்தவில்லை – 
தமிழ் மலர் – 29.08.2019

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2257674064523253


22/8/2019 – THURSDAY

மலேசிய இந்தியர்களின் நாட்டுப் பற்று – 3
தமிழ் மலர் – 22.08.2019

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2252833481673978


21/8/2019 – WEDNESDAY

உத்துசான் மலேசியா முற்றுப் பெறுகிறது?
தமிழ் மலர் – 21.08.2019

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2251841205106539


20/8/2019 – TUESDAY

மலேசிய இந்தியர்களின் நாட்டுப் பற்று – 2
தமிழ் மலர் – 20.08.2019

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2251460901811236


17/8/2019 – SATURDAY

மலேசிய இந்தியர்களின் நாட்டுப் பற்று: 
ஜாகிர் நாயக் நிந்தனைகள் – பாகம் 1

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2249101228713870


03/08/2019 – SATURDAY

மலேசிய அஞ்சல் குறியீட்டு முறையை அறிமுகம் செய்த டத்தோ ராஜசிங்கம்

FOR MOR EINFO:
https://www.facebook.com/myinfozon/posts/2240234782933848


29/7/2019 – MONDAY

மலேசியாவின் முதல் மாநகர் மேயர் டி. எஸ். ராமநாதன் 

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2237259289898064

https://docs.google.com/document/d/1uHc0HRBlUFswXOhbFsbm_-i2x4bgXeGYv6aqaSUj6vQ/edit?usp=sharing


29/7/2019 – MONDAY

தெய்வநாயகம் செட்டி மலாக்கா – 1781

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2236607419963251

https://docs.google.com/document/d/1FILxuUlTolBGAdr8bQd1s7mJeoKuTfFoIQ_1Exxj3GA/edit?usp=sharing26/7/2019 – FRIDAY

மலாயாவின் முதல் ரப்பர் மரத்தின் வயது 140
=========================================
(இது ஒரு நீண்ட கட்டுரை)

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2234783543478972:0

https://docs.google.com/document/d/1azLn_jim6a-cOFUJBvMYGDbJABlO03W5w1BZQKaNWQI/edit?usp=sharing&fbclid=IwAR2o9X7M5GclXh33vwOSIBevmb7Bcwcd-hmrouzB9Askw9qQMQ5350p9qpA

22/07/2019 – MONDAY

மலேசியாவின் மிகப் பழைமை வாய்ந்த இந்து கோயில்

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2232398470384146


16/7/2019 – TUESDAY

தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் – 5
தமிழ் மலர் – 16.07.2019

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2228034104153916


15/7/2019 – MONDAY

பிலிப்பைன்ஸ் நாட்டில் கலிங்கர்கள்

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2227893250834668


14/6/19

9/6/19

1/6/19

31/12/18

30/12/18

19/12/18

Muthukrishnan Ipoh
December 19, 2018 at 10:53 PM ·
ஐசெர்ட் பேரணி
தமிழ் மலர் 19.12.2018 புதன்கிழமை
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

பழையபடி பழைய ஆட்சி வந்தால் கட்டுவதற்கு கைலிகூட கிடைக்காமல் போகலாம். கிடைத்தாலும் சத்து பாராங் சத்து ரிங்கிட் கைலியாக இருக்கலாம். படுப்பதற்கு பாய் இல்லாமல் போகலாம். சீனாக்காரனிடம் நாடு அடைமானம் வைக்கப் படலாம்.

2018 டிசம்பர் 8-ஆம் தேதி சனிக்கிழமை மலாய் – முஸ்லீம் அரசு சாரா இயக்கங்களின் ஏற்பாட்டில் அம்னோ; பாஸ் கட்சிகளின் ஆதரவோடு ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது.

5 இலட்சம் பேர் கலந்து கொண்டதாக அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி பெருமையுடன் கூறினார். 80 ஆயிரமாக இருக்கும் என மலேசியாகினி மதிப்பிட்டது. 55 ஆயிரம் பேர் என காவல் துறையினர் கணிக்கின்றனர்.

மூன்று விதமான புள்ளிவிவரங்கள். பேரணியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் நல்ல ஒரு பிரார்த்தனையுடன் பேரணி நிறைவு கண்டது. என்ன பிரார்த்தனை தெரியுங்களா?

இப்போது நடப்பில் இருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சி சீக்கிரம் முடிவுக்கு வரவேண்டும் என்கிற பிரார்த்தனை. அந்தப் பிரார்த்தனை நிறைவேறுமா.

அந்தப் பிரார்த்தனை நிறைவேறினால் ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. ஒன்று மட்டும் உண்மை. பழையபடி பழைய ஆட்சி வந்தால் கட்டுவதற்கு கைலிகூட கிடைக்காமல் போகலாம். கிடைத்தாலும் சத்து பாராங் சத்து ரிங்கிட் கைலியாக இருக்கலாம்.படுப்பதற்கு பாய் இல்லாமல் போகலாம். சீனாக்காரனிடம் நாடு அடைமானம் வைக்கப் படலாம்.

ஒரு முக்கியமான விசயம். நடக்கலாம் என்று தான் சொல்கிறேன்.

இந்த உலகில் ஒரே ஓர் இனம் மட்டும் தான் தன் இனத்தையே தரம் பிரித்துப் பார்க்கின்ற இனம். தராசு பிடிக்காமல் தன் இனத்தையே நிறுத்துப் பார்க்கின்ற இனம்.

கறுப்பா செகப்பா என்று கலர் பார்க்கின்ற இனம். ஒசத்தி கண்ணா ஒசத்தி என்று தலைமயிரைப் பிடுங்கி வீரம் பேசுகின்ற தரம் கெட்ட இனம். சொல்ல வெட்கமாக இருக்கிறது. சொல்லா விட்டால் துக்கமாக இருக்கிறது.

1965 டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி ஐ.நா. சபை ஒரு திட்டத்தை முன்மொழிந்தது. அதற்குப் பெயர் அனைத்து இனப் பாகுபாடுகளை அகற்றும் அனைத்துலக ஒப்பந்தம். சுருக்கமாக ஐசெர்ட். 1969 ஜனவரி 4-ஆம் தேதி அந்தத் திட்டம் அமலுக்கு வந்தது.

அனைத்து இனப் பாகுபாடுகளை அகற்றும் அனைத்துலக ஒப்பந்தம்

International Convention on the Elimination of All Forms of Racial Discrimination

அந்தத் திட்டத்திற்குத் தான் எத்தனை எத்தனை எதிர்ப்புகள். எத்தனை எத்தனை நமைச்சல்கள். இருக்கிற கொசுக்கடிகளில் ரொம்பவுமே மோசமான கொசுக்கடி. சொரிந்து சொரிந்து தோலும் உரிந்து விட்டது. விடுங்கள்.

அந்தத் திட்டத்தை எதற்காகக் கொண்டு வந்தார்கள் தெரியுமா. அனைத்து மனித இனங்களுக்கும் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து இனங்களுக்கும் இடையே வெறுப்பு உணர்வுகளைத் தூண்டும் பேச்சுகளுக்குத் தடை விதிக்க வேண்டும். மனித இனங்களுக்கு இடையில் நிரந்தரமான நட்புறவை வளர்க்க வேண்டும். இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில்…

இனம், மொழி, கலாசாரம், நிறம் என்று மனித இனத்தைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. மனிதர்களில் எவரும் உயர்ந்தவர் இல்லை. தாழ்ந்தவர் இல்லை. மனிதர்கள் அனைவரும் மனிதர்களே எனும் மனிதத் தன்மையுடன் வாழ வேண்டும் என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

ஒரு மனிதர் இன்னொரு மனிதரை மதிக்க வேண்டும். அவரின் தனிப்பட்ட மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். மனிதர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். அவற்றுக்கான ஒரு முன்னோடித் திட்டமாக ஐ.நா.வின் ஐசெர்ட் திட்டம் கொண்டு வரப்பட்டது.

ஒரே சொல்லில் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் அனைத்துலகத் திட்டம் என்று சொல்லலாம். உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செய்து கொண்ட ஒரு மனிதப் புரிந்துணர்வுத் திட்டம் என்றும் சொல்லலாம்..

உலகில் இருக்கிற சின்னச் சின்னக் குட்டி நாடுகளை எல்லாம் சேர்த்தால் மொத்தம் 247 நாடுகளின் பட்டியல் வருகின்றது. இருந்தாலும் ஐ.நா. சபையினால் 197 நாடுகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு உள்ளன.

அந்த 197 நாடுகளில் 179 நாடுகள் அனைத்து இனப் பாகுபாடுகளை அகற்றும் அனைத்துலக ஒப்பந்தம் எனும் ஐசெர்ட்டில் கையொப்பம் வைத்து உறுதி செய்து உள்ளன. 14 நாடுகள் கையொப்பம் வைக்கவில்லை. அவற்றுள் மலேசியாவும் ஒரு நாடு.

மியன்மார், தென் சூடான், வட கொரியா, வானுவாத்து (Vanuatu), கூக் தீவுகள் (Cook Islands), மார்ஷல் தீவு (Marshall Islands), கிரிபாத்தி (Kiribati), சமோவா (Samoa), நியூ (Niue), துவாலு (Tuvalu) ஆகிய நாடுகள் இன்னும் கையொப்பம் வைக்கவில்லை.

அங்கோலா, பூத்தான், நவுரு (Nauru), பாலாவ் (Palau) ஆகிய நாடுகள் கையொப்பம் வைத்து விட்டாலும் அந்தக் கையொப்பங்களை இன்னும் உறுதி படுத்தாமல் உள்ளன.

1960-ஆம் ஆண்டுகளில் இனப் பாகுபாடு; சமயச் சகியாமை பெருகி வந்தன. அவற்றைச் சரி செய்யவே ஐசெர்ட் ஒப்பந்தம் முன்வைக்கப் பட்டது. 1965-ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் ஐ.நா. சபை நாடுகளால் ஒருமித்தமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மலேசியா; புருணை ஆகிய இரு நாடுகள் ஐசெர்ட் ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்து இடவில்லை.

அரபு கூட்டமைப்பில் உள்ள 22 அரபு நாடுகளும் ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய இஸ்லாமிய நாடுகளும் ஐசெர்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உறுதி செய்து விட்டன.

கையொப்பம் வைத்த பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் நாட்டுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாது எனும் கருத்தை முன்வைக்கின்றன. அமெரிக்காவும் சில விதி முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும் கைபொப்பம் வைத்து விட்டது.

உலகின் பல நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வைத்து விட்டாலும் ஒரு சில விதிமுறைகளுக்குக் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

2017 நவம்பர் மாதம் சிங்கப்பூர் கையொப்பம் வைத்தது. இருப்பினும் தன் சொந்த கொள்கைகளை (வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவகாரத்தில்) விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக இருக்கிறது.

சீனா, இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் சில விதிமுறைகளுக்குக் கட்டுப்படவில்லை. ஐசெர்ட் பிரச்சினைகளை அனைத்துலக நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல இயலாது என்று அந்த நாடுகள் சொல்கின்றன.

பாஸ் கட்டுப்பாட்டில் உள்ள கிளந்தான் அரசாங்கம் டிசம்பர் 8-ஆம் தேதியில் கோலாலம்பூரில் பேரணி நடைபெறுவதால் மறுநாள் டிசம்பர் 9-ஆம் தேதியை ஒரு விடுமுறை நாளாக அறிவித்தது.

விடுமுறை அளித்தால் கிளந்தான் மக்கள் கோலாலம்பூர் பேரணியில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும்; அத்துடன் கூட்டரசு அரசாங்கம் செய்து உள்ள முடிவைக் கொண்டாடுவதற்கு வசதியாகவும் இருக்கும் என்று கிளந்தான் மந்திரி புசார் அகமட் யாகூப் கூறி இருக்கிறார்.

ஐசெர்ட் பேரணியில் தெளிவற்ற நோக்கமே புலப் படுகிறது. அரசியல் நோக்கமே பிரதானமாகத் தெரிகின்றது. அரசாங்கம் ஐசெர்ட் மாநாட்டில் கையொப்பமிடாது என்று அறிவித்தும் அதனை எதிர்க்கும் ஒரு சில தரப்பினரின் ஏற்பாடுகள் தேவையற்றவை என்பதே என் கருத்து.

ஆனால் மலேசிய சோசலிசக் கட்சி வேறு மாதிரியாகக் கருத்து கூறுகிறது. எல்லா வகையான இனப் பாகுபாடுகளையும் அகற்றுவதற்கு முன்னர் நம் நாட்டுத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் என்று மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கருதுகிறது.

பக்காத்தான் அரசாங்கத்திற்கு உண்மையிலேயே இப்போது ஒரு மிகப் பெரிய சவாலான கட்டம். ஐசெர்ட் ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்துப் போட்டால் தங்களின் சிறப்புரிமைகள் பறிபோகும் என்று பெரும்பான்மை மலாய் மக்கள் கருதுகிறார்கள். அவர்களின் அந்தக் கவலைக்குச் சரியான தீர்வு காணப்பட வேண்டும்.

அம்னோ – பாஸ் தலைவர்கள் தங்களின் அரசியல் லாபத்திற்காக மட்டுமே ஐசெர்ட் தொடர்பான பிரச்சனைகளை எழுப்புகிறார்கள் என்று கருதுவதும் தவறான கருத்து என்று நான் கருதுகிறேன். அரசியல் லாபத்தையும் தாண்டிய ஓர் எதிர்பார்ப்பும் உள்ளது.

விவசாயிகள், சிறு தோட்ட விவசாயிகள், சிறு வியாபாரிகள், கீழ்மட்ட அரசு ஊழியர்கள் போன்ற மலாய் மக்களுக்கு; ஐசெர்ட் உண்மையிலேயே கவலை அளிக்கும் விசயமாக உள்ளது.

61 ஆண்டு காலமாகச் சமூக அடிப்படையிலான கொள்கைகள் நடைமுறைபடுத்தப் பட்டன. தெரிந்த விசயம். இருப்பினும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் தாங்கள் இன்னும் பின்னணியில் இருப்பதாகவே பெரும்பாலான மலாய் மக்கள் நினைக்கிறார்கள்.

இந்த நாட்டில் அம்னோ – பாரிசான் இனவாத அடிப்படையிலான கொள்கை 61 ஆண்டுகள் பயணித்து வந்து உள்ளது. அத்தகைய கொள்கையினால் மலாய்க்காரர்கள் இடையே வருமான இடைவெளி தான் அதிகரித்து உள்ளது.

அவர்களுள் 20 விழுக்காட்டினர் மட்டுமே வளப்பம் அடைந்து உள்ளார்கள். அதுவும் அரசியல் சார்ந்த தரப்பினர் மட்டுமே வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்து உள்ளனர். எஞ்சிய பெரும்பான்மை மலாய்க்காரர்கள் இன்றும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த எதார்த்த உணமையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய வரையில் பொருளாதார ரீதியாகப் போராடி வரும் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்த மலாய்க்காரர்கள் அவர்களுக்கு இன்னும் அந்தச் சிறப்பு உரிமை தேவை என்று நினைக்கிறார்கள். அதனால் தான் ஐசெர்ட்டில் கையெழுத்துப் போட்டால் அவர்களின் சிறப்புரிமைகள் அகற்றப் படலாம் என்று அவர்கள் கவலைப் படுகிறார்கள்.

ஆகவே அம்னோ – பாரிசான் அறிமுகப் படுத்திய இனவாத அடிப்படையிலான கொள்கைகளை இப்போதைய அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மலாய்க்காரர்கள்; அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஐசெர்ட் ஏற்படுத்தி உள்ளது.

ஐசெர்ட் ஒப்பந்தத்தை மலேசியா அங்கீகரிக்கவில்லை. ஆனால் அதையே வேறு கோணத்தில் பார்க்கிறது. இந்த நாட்டை தோற்றுவிக்கும் போது அனைத்து இனத்தவர்களின் பிரதிநிதிகளால் ஒரு சமூக ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. புரியும் என்று நினைக்கிறேன்.

அந்த வகையில் கூட்டரசு அரசமைப்பு சட்டத்தின் அந்த உள்ளடக்கம் தொடந்து தற்காக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது. மலாய் மக்களின் சிறப்பு உரிமைகளைத் தான் சொல்ல வருகிறேன். அந்த உரிமைகள் அவர்களின் தனிப்பட்ட உரிமைகள்.

2018 டிசம்பர் 8-ஆம் தேதி சனிக்கிழமை மலாய் – முஸ்லீம் அரசு சாரா இயக்கங்களின் ஏற்பாட்டில் அம்னோ; பாஸ் கட்சிகளின் ஆதரவோடு ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது.

5 இலட்சம் பேர் கலந்து கொண்டதாக அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி பெருமையுடன் கூறினார். 80 ஆயிரமாக இருக்கும் என மலேசியாகினி மதிப்பிட்டது. 55 ஆயிரம் பேர் என காவல் துறையினர் கணிக்கின்றனர்.

மூன்று விதமான புள்ளிவிவரங்கள். பேரணியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் நல்ல ஒரு பிரார்த்தனையுடன் பேரணி நிறைவு கண்டது. என்ன பிரார்த்தனை தெரியுங்களா?

இப்போது நடப்பில் இருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சி சீக்கிரம் முடிவுக்கு வரவேண்டும் என்கிற பிரார்த்தனை. அந்தப் பிரார்த்தனை நிறைவேறுமா.

அந்தப் பிரார்த்தனை நிறைவேறினால் ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. ஒன்று மட்டும் உண்மை. பழையபடி பழைய ஆட்சி வந்தால் கட்டுவதற்கு கைலிகூட கிடைக்காமல் போகலாம். கிடைத்தாலும் சத்து பாராங் சத்து ரிங்கிட் கைலியாக இருக்கலாம். படுப்பதற்கு பாய் இல்லாமல் போகலாம். சீனாக்காரனிடம் நாடு அடைமானம் வைக்கப் படலாம். ஒரு முக்கியமான விசயம். நடக்கலாம் என்று தான் சொல்கிறேன்.

ஆப்பிரிக்காவில் அப்படித் தானே நடக்கிறது. சில நாடுகள் சீனாவிடம் சிக்கிக் கொண்டு தவிக்கின்றன. அடுத்து இலங்கை அந்தப் பட்டியலில் வரிசை பிடித்து நிற்கிறது. அந்த நிலைமை நமக்கு வரக் கூடாது என்று வேண்டிக் கொள்வோம். இன்னும் ஒரு விசயம்.

உலகத்திலேயே அதிகமான பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளில் மலேசியாவிற்குத் தனி ஓர் இடம். ஓர் ஆண்டில் 40-க்கும் மேற்பட்ட விடுமுறைகள். இதில் மருத்துவ விடுமுறைகள்; கல்யாணம் காதுகுத்து; சமய சாங்கிய விடுமுறைகள். அவை கணக்கில் சேர்க்கப்படும் விடுமுறைகள்.

அதையும் தாண்டிய நிலையில் அப்பாவுக்கு முதுகு வலி; அம்மாவுக்கு மூக்கு வலி; அக்காவுக்கு தொண்டை வலி; ஆத்தாவுக்கு மண்டை வலி. இப்படி ஏகப்பட்ட வீட்டு வலிகள். இவை எல்லாம் விதிமுறைகளில் சேர்க்க முடியாத விடுமுறைகள்.

அந்தப் பட்டியலில் இப்போது ஒரு புதுவிதமான விடுமுறை கணக்கில் வந்து சேர்கிறது. அதன் பெயர் ஆஹா ஆர்ப்பாட்ட விடுமுறை. நல்ல ஒரு விடுமுறை. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மறந்துவிடப் போகிறீர்கள்.

இந்த விடுமுறை ரொம்ப ரொம்ப முக்கியமான விடுமுறை. பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு மாநில அரசாங்கம் பிரத்தியேகமாக உருவாக்கிக் கொடுத்த விடுமுறை.

எதிர்காலத்தில் இந்த விடுமுறைக்கு நீல கார்ட் கிடைப்பதும் சிவப்பு கார்ட் கிடைப்பதும்… அது அவர்களின் கூட்டணியைப் பொருத்த விசயம். நாம் தலையிட முடியாது.

பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எவ்வளவு அலைச்சல். எவ்வளவு உளைச்சல். எவ்வளவு எரிச்சல்.

அந்த அர்ப்பணிப்பு உணர்வுகள் எல்லாம் முன்கூட்டியே சீர்தூக்கிப் பார்க்கப் பட்டன. அதன் பின்னர் சிறப்பாகச் சிலை வடிக்கப்பட்ட ஒரு விசுவாச விருது தான் அந்த ஆர்ப்பாட்ட விடுமுறை.

என்னைக் கேட்டால் தேவையே இல்லாத விடுமுறை. பொறுப்பு உள்ளவர்கள் எடுத்த ஒரு கேலித்தனமான முடிவு. அதனால் நாட்டு மக்களுக்கும் இழப்பு. நாட்டு வருமானத்திற்கும் இழப்பு. அந்த வகையில் நாட்டு மக்களைச் சோம்பேறிகளாக மாற்றுவதும் தப்பு.

சான்றுகள்

 1. https://www.ohchr.org/…/ProfessionalInterest/Pages/CERD.aspx
 2. “International Convention on the Elimination of All Forms of Racial Discrimination (ICERD)”. Office opf The High Commissioner for Human Rights. UN
 3. United Nations General Assembly Resolution 2106 (XX), 21 December 1965.
 4. Procedural history and related documents on the International Convention on the Elimination of All Forms of Racial Discrimination in the Historic Archives of the United Nations Audiovisual Library of International Law

12/12/18

இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுப்பு – 5
தமிழ் மலர் – 11.12.2018 – செவ்வாய்க்கிழமை

இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகள் மட்டும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். மலேசிய இந்தியர்களின் வரலாற்றை எப்போதோ பொட்டலம் கட்டி போத்தல் கடையில் விற்று இருப்பார்கள். தெரியுதுங்களா. நாம் ஒன்றும் வாசிக்க முடியாது. ஒன்றுமே பேச முடியாத அளவிற்கு வாயைக் கட்டிப் பொத்தி வைத்து இருப்பார்கள். நல்ல வேளை. தப்பித்தோம். சரி.

இராஜேந்திர சோழனின் படைகள் பலேம்பாங்கை விட்டு வெளியாகும் போது ஸ்ரீ விஜய கடல்படைகள் பலத்த எதிர்ப்புகளைக் கொடுத்தன. சோழப் படைகளுக்கு ஏற்கனவே பலத்த சேதங்கள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டன.

ஒரு கட்டத்தில் சுந்தா நீரிணையில் பயங்கரமான மோதல். இராஜேந்திர சோழன் பின் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடைய படைகளில் பாதி பேர் பலியானதாக வரலாற்று ஆசிரியர் ஜார்ஜ் ஸ்பென்சர் சொல்கிறார்.

இராஜேந்திர சோழன் கைப்பற்றிய அரசுகளைத் தக்க வைத்து இருக்க வேண்டும். அரசுப் பிரதிநிதிகளை நியமித்துவிட்டுப் போனது தவறு. தடி எடுத்தவன் தண்டல் ஆவான் என்று சொல்வார்களே அந்த மாதிரிதான் தீபகற்ப மலேசியாவிலும் நடந்து விட்டது.

இராஜேந்திர சோழன் நம்பிக்கையோடு விட்டுச் சென்ற சிற்றரசுகளும் பேரரசுகளும் காலப் போக்கில் மாறிப் போயின. மதமாற்றங்கள் ஒரு காரணம். வரலாறும் மாறிப் போய்க் கிடக்கிறது.

Chola invasion ultimately failed to install direct administration over Srivijaya. Since the invasion was short and only meant to plunder. This invasion gravely weakened the Srivijayan hegemony and enabled the formation of regional kingdoms like Kahuripan, Kediri in Java.

Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. p. 163.

இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் வருகின்றன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம். தமிழகக் கோயில்களில் இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் நிறையவே கிடைத்து உள்ளன.

மெய்க்கீர்த்திகள் என்றால் கல்வெட்டுகளில் ஓர் அரசரைப் பற்றி செதுக்கப் பட்ட பெருமைச் செய்திகள்.

அதாவது ஓர் அரசரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய புகழ்ச் செயல்களையும் புகழ்ச் சாதனைகளையும் கூறும் கல்வெட்டுகளைத் தான் மெய்க்கீர்த்திகள் என்று அழைக்கிறார்கள். அவற்றைப் புகழ்மாலைகள் என்றுகூட சொல்லலாம்.

இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் நூல் வடிவில் கோர்த்துத் தொகுப்புகளாக வைத்து இருக்கிறார்கள். அந்த நூல் கோர்வையின் பெயர் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்திகள். அந்தக் கோர்வையின் முதல் தொகுப்பு எண்: 66, பக்கம்: 98-இல் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இராஜேந்திர சோழன் நடந்து வந்த பாதையில் தென்பட்ட அத்தனை நகரங்களும் அவனுடைய காலடியில் வீழ்ந்தன. கங்கா நகரம் எனும் நகரத்திற்கு வரும் போது அந்த நகரை ராஜா லிங்கயோகன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். இவருக்கு ராஜா லிங்கி ஷா ஜோகான் எனும் மற்றொரு பெயரும் உண்டு.

ஒரு குன்றின் உச்சியில் கங்கா நகரம் இருந்தது. அந்த நகருக்கு தற்காப்புக்காக ஒரு பெரிய கோட்டை கம்பீரமாய் நின்றது. ஒரு குட்டி மலை போல காட்சி அளித்தது. அந்தக் கோட்டை பேராக் ஆற்று ஓரத்தில் இருந்தது. (அந்த இடம் டிண்டிங்ஸ் என்று இப்போது அழைக்கப் படுகிறது)

இராஜேந்திர சோழன் வருவதை அறிந்த ராஜா லிங்கயோகன் தன்னுடைய படைகளை ஒன்று கூட்டினார். கோட்டையின் வாசல் கதவை மூடச் சொன்னார். கோட்டையைச் சுற்றி உள்ள கால்வாய்களில் நீரை நிரப்பச் சொன்னார். அதற்குள் இராஜேந்திர சோழனின் படையினர் கோட்டையை முற்றுகை செய்தார்கள்.

ராஜா லிங்கயோகனின் கோட்டை மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்து இருக்கிறது. எளிதாகத் தகர்த்து உள்ளே நுழைய முடியவில்லை. சோழப் படை வீரர்கள் தீவிரமாகத் தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தாக்குதல்களுக்கு இராஜேந்திர சோழனே முன் நின்றார். ஒரு யானையின் மீது ஏறி தாக்குதல்களை நடத்தினார்.

அவற்றை எதிர்த்த கங்கா நகரத்தின் ராஜா லிங்கயோகனின் படையினர் இராஜேந்திர சோழனின் படைகளைச் சரமாரியாகத் தாக்கினார்கள். ஈட்டிகளாலும் அம்புகளாலும் தொடர் எய்தல்களைத் தொடுத்தார்கள்.

ஒரு கட்டத்தில் இராஜேந்திர சோழன் கோட்டையின் கதவுகளை இராட்சச இரும்புக் குண்டுகளால் அடித்துத் தகர்க்க ஆரம்பித்தார். தொடர் தாக்குதல்களினால் கோட்டையின் கதவுகள் சன்னம் சன்னமாய்த் தகர்ந்தன. இராஜேந்திர சோழனின் தளபதிகளும் வீரர்களும் விறுவிறுவென்று கோட்டைக்குள் நுழைந்தார்கள்.

அங்கே ராஜா லிங்கயோகன் சோழப் படைகளை எதிர்த்துச் சண்டை போட தயாராக இருந்தான். அவனுக்குப் பின்னால் ஒரு படையே பக்கபலமாக நின்றது. இராஜேந்திர சோழன் தன்னை நோக்கி முன்னேறி வருவதைக் கண்ட ராஜா லிங்கயோகன் அவர் மீது நச்சு கலந்த அம்புகளை எய்தினார்.

அதில் ஓர் அம்பு இராஜேந்திர சோழனின் மீது படாமல் அவர் ஏறி வந்த யானையின் தும்பிக்கையைத் தைத்துச் சென்றது. நச்சுக் கலவையைத் தாங்க முடியாமல் யானையும் சரிந்து விழுந்தது.

இராஜேந்திர சோழன் சட்டென்று கீழே குதித்தார். தன் வாளை உருவிய அவர் ராஜா லிங்கயோகனைத் தாக்கினார். ஒரு வாள் வீச்சு ராஜா லிங்கயோகனின் கழுத்தில் பட்டது. ராஜா லிங்கயோகனின் தலை துண்டாகிப் போனது. ராஜா லிங்கயோகனின் அங்கேயே இறந்து போனார்.

அதைப் பார்த்த ராஜா லிங்கயோகனின் படையினர் மூலைக்கு மூலை சிதறி ஓடினார்கள். அவ்வளவு தான். பின்னர் கங்கா நகரம் சூறையாடப் பட்டது.

அதன் பின்னர் இராஜேந்திர சோழனின் கடல் படையின்ர் நேரடியாகக் கடாரத்தில் போய் தரை தட்டவில்லை. எல்லோரும் அப்படித் தான் நினைக்கிறார்கள். பேராக் ஆற்றின் முகத்துவாரத்தில் கரை இறங்கி இருக்கிறார்கள். அங்கு இருந்து தான் கங்கா நகரத்திற்குப் படைகள் போய் இருக்கின்றன.

அப்போது கடாரத்தின் ஆட்சியாளராக இருந்தவர் லிங்கயோகன். சற்றுமுன் தெரிந்து கொண்டீர்கள். ஆனால் ஒட்டு மொத்த ஸ்ரீ விஜய பேரரசின் அரசராக சங்கர ராமா விஜயதுங்க வர்மன் மட்டுமே இருந்து இருக்கிறார். இவரின் வசிப்பிடம் பலேம்பாங்.

ஸ்ரீ விஜய பேரரசின் துணைச் சிற்றரசுகளுக்கு அரசுப் பிரதிநிதிகளை நியமித்து இருக்கிறார். அந்தப் பிரதிநிதிகளைச் சிற்றரசர்கள் என்று அழைத்து இருக்கிறார்கள்.

அதே போல கடாரத்திற்கும் ஓர் ஆட்சியாளரை நியமித்து இருக்கிறார். அந்த ஆட்சியாளரே கடாரத்தின் சிற்றரசராகவும் சேவை செய்து இருக்கிறார். அவர் தான் லிங்கயோகன்.

கங்கா நகரமும் கடாரமும் தோற்கடிக்கப்பட்ட பின்னர் லிங்கயோகனின் மகள் புத்திரி கங்காவை இராஜேந்திர சோழன் மணம் செய்து கொண்டார்.

Inscription of Virarajendra Chola at Bahawathi Amman shrine at Agatheseswarem temple in Kanyakumari district, Tamil Nadu, India – Travancore Archeological Series vol 111, Part 1, No 41

கங்கா நகரம் எப்படி இராஜேந்திர சோழன் கரங்களில் வீழந்தன. அதைப் பற்றியும் கல்வெட்டுகளில் கிடைத்த விளக்கத்தையும் பார்த்தீர்கள்.

கங்கா நகரத் தாக்குதல் என்பது மறக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதைப் பற்றி இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளின் வழியாகத் தெரிந்து கொண்டோம்.

இன்னும் ஒரு விசயம். கடாரம் எங்கே இருக்கிறது புருவாஸ் டிண்டிங்ஸ் எங்கே இருக்கிறது. அதைக் கவனித்தீர்களா. எப்படியும் 150 மைல்கள் இடைவெளி இருக்கும். இல்லீங்களா. அதைப் பார்க்கும் போது உண்மையிலேயே மலைப்பு ஏற்படுகிறது.

இருப்பினும் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளைச் சான்றாக வைத்து தான் வரலாற்றைப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்த வகையில் கடாரத்தின் எல்லை கெடாவில் மட்டும் தனித்துப் போகவில்லை. பேராக் மாநிலத்திலும் பரவி இருந்து இருக்கிறது. பேராக் தைப்பிங் வரையிலும் விழுதுகள் விட்டுப் போய் இருக்கிறது.

நம்ப முடிகிறதா. என்னைக் கேட்டால் கங்கா நகரமும் கடாரமும் ஒன்றாக இருந்து இருக்க வேண்டும். இல்லை என்றால் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளில் எப்படி பேராக் ஆற்றைப் பற்றிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டு இருக்க முடியும். சொல்லுங்கள்.

இதைப் பற்றி மேலும் ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறேன். அதனால் இதோடு இதை நிறுத்திக் கொள்வோம்.

கடாரத்தை வென்ற பின்னர் இராஜேந்திர சோழனின் படைகள் மலாயா தென் பகுதிக்குப் பயணித்து இருக்கின்றன. அங்கே தான் மாயிருண்டகம் எனும் பேரரசு இருந்தது. இந்த மாயிருண்டகம் தான் கோத்தா கெலாங்கி. புரியுதுங்களா.

இந்தக் கட்டுரைத் தொடரில் 08.12.2018 சனிக்கிழமை வெளியான கட்டுரையில் மாயிருடிங்கம் என்று பதிவு செய்து இருக்கிறேன். எழுத்துப் பிழைகள் ஏற்பட்டு உள்ளன. படித்து இருப்பீர்கள். கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆங்கில வரலாற்றுப் பதிவுகளிலும் சரி; செஜாரா மெலாயு பதிவுகளிலும் சரி; மாயிருடிங்கம் என்றே பதிவு செய்து இருக்கிறார்கள். ஆக மாயிருடிங்கம் என்பதையே நானும் அப்படியே பதிவு செய்து விட்டேன். ஆனால் மாயிருடிங்கம் என்பதை மாயிருண்டகம் என்று தான் அழைக்க வேண்டும். சரிங்களா.

மாயிருண்டகம் எனும் சொல்லைப் பிரித்துப் பாருங்கள். மா + இருண்டகம் என இரு சொற்கள் பிரிந்து வருவதைப் பார்க்கலாம். ’மா’ என்றால் ’பெரிய’ என்று பொருள். ’இருண்டகம்’ என்றால் ’இருண்டு கிடக்கும் இடம்’ என்று பொருள்.

அந்தக் காலக் கட்டத்தில் மாயிருண்டகத்தில் மாபெரும் கோட்டை இருந்து இருக்கிறது. கரும் கற்பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட கோட்டை. தொலைதூரத்தில் இருந்து பார்க்கும் போது கருமையாகக் காட்சி அளித்து இருக்கின்றது. அதை வைத்துத் தான் அந்த இடத்திற்கு மாயிருண்டகம் எனும் பெயர் வந்து இருக்கலாம்.

கோத்தா கெலாங்கியை லெங்குய் என்று சீன நாட்டவர் அழைத்து இருக்கிறார்கள். இராஜேந்திர சோழன் காலத்திற்கு முன்னரே; பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சீன நாட்டு வணிகர்கள் தென்னிந்தியாவில் வணிகம் செய்யப் போய் இருக்கிறார்கள்.

அப்படிப் போகும் வழியில் கோத்தா கெலாங்கியைப் பார்த்து லெங்குய் என பெயர் வைத்து இருக்கிறார்கள். இப்போது அங்கே லிங்கி எனும் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் பெயர் தான் லெங்குய் என்று மருவி உள்ளது.

லெங்குய் எனும் பெயர்தான் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளிலும் இடம் பெற்று உள்ளன. சீன நாட்டவர் பயன்படுத்திய அதே செங்குய் எனும் பெயரையே மெய்க்கீர்த்திகளிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Maayirudingam a big city in South Malaya with a fortress of blackstone (granite) known as ‘Glang Gui’ (Lenggui in corrupted form). The kingdom of Maayirudingam at that time was ruled by the king Chulaamanivarman.

மாயிருண்டகத்தைப் பற்றி மெய்க்கீர்த்திகள் என்ன சொல்கின்றன. அதையும் பார்ப்போம். ஒரு செருகல்.

இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகள் மட்டும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். மலேசிய இந்தியர்களின் வரலாற்றை எப்போதோ பொட்டலம் கட்டி போத்தல் கடையில் விற்று இருப்பார்கள். தெரியுதுங்களா. நாம் ஒன்றும் வாசிக்க முடியாது. ஒன்றுமே பேச முடியாத அளவிற்கு வாயைக் கட்டிப் போட்டு இருப்பார்கள். நல்ல வேளை. தப்பித்தோம். சரி. விசயத்திற்கு வருகிறேன்.

மாயிருண்டக அரசு. அதைச் சுற்றிலும் ஆழ்க் கடல்கள். நூற்றுக் கணக்கான வணிகக் கப்பல்கள். பச்சைக் காடுகள் மேவிய தீபகற்பத்தின் தென் பகுதியில் மாயிருண்டக அரசு மையம் கொண்டு இருந்தது.

மாயிருண்டகத்தின் தலைநகரம் லெங்குய். கருங்கற்களால் ஆன பெரிய ஒரு கோட்டை தலைநகரத்தைப் பாதுகாத்தது. அந்த நகரத்தின் வலது புறத்தில் ஒரு பெரிய ஆறு.

சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசிற்கு மாயிருண்டக அரசு அடிபணிந்து சேவை செய்து வந்தது. சூளாமணி வர்மன் என்பவர் அந்த அரசின் பேரரசராக இருந்தார்.

மறுபடியும் சொல்கிறேன். அந்த நகருக்கு கருங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை பாதுகாப்பு அரணாக வலிமை சேர்த்து இருக்கிறது. மாயிருண்டகப் பேரரசை ஆகக் கடைசியாக சூளாமணி வர்மன் என்பவர் ஆட்சி செய்து இருக்கிறார்.

இராஜேந்திர சோழனின் படைகள் வருவதை அறிந்த சூளாமணி வர்மன் தன்னுடைய படைகளை எல்லாம் ஒன்று திரட்டினார். இராஜேந்திர சோழன் வரும் பாதையை நோக்கி முன்னேறிச் சென்று இருக்கிறார். இருபது மைல்கள் கடந்ததும் இராஜேந்திர சோழனின் படைகளை எதிர்கொண்டார்.

யானையின் மீது ஏறி வந்த சூளாமணி வர்மன் சோழப் படைகளின் மீது தாக்குதல் நடத்தினார். இராஜேந்திர சோழனும் தன்னுடைய யானை மீது அமர்ந்தவாறு எதிர்த் தாக்குதல் செய்தார். இரு தரப்பிலும் நூற்றுக் கணக்கான பேர் இறந்து போனார்கள்.

அது ஒரு கசப்பான போர். இராஜேந்திர சோழன் கூர் அம்புகளால் சூளாமணி வர்மனைத் தாக்கினார். அதில் ஓர் அம்பு சூளாமணி வர்மன் மீது பாய்ந்தது. அவர் உடனடியாக இறந்து போனார். தலைவரை இழந்த மாயிருண்டகப் படைகள் மூலைக்கு ஒன்றாய்ச் சிதறி ஓடின.

அதன் பின்னர் சோழப் படைகள் தங்கு தடை இல்லாமல் கெலாங்கி கோட்டைக்குள் நுழைந்தன. கோட்டைக்குள் இருந்த அரண்மனைக் கதவுகளை உடைத்து உள்ளே சென்றன. மாயிருண்டகப் பேரரசின் செல்வங்களை எல்லாம் சூறையாடின. குவிந்து கிடந்த பொன்னும் மணியும்; பவளமும் வைரமும்; மாணிக்கமும் மரகதமும் சுத்தமாக வழித்து எடுக்கப் பட்டன.

(சான்று: இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி; கோர்வையின் முதல் தொகுப்பு; எண்: 66, பக்கம்: 98.)

பின்னர் மாயிருண்டகத்தின் அரசர் சூளாமணி வர்மனின் மகள் இளவரசி ஒனாங்கி (ஓனாங் கியூ) என்பவரை இராஜேந்திர சோழன் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இராஜேந்திர சோழனின் படைகள் கடல் வழியாகக் கடாரத்திற்குச் சென்றன.

(தொடரும்)

சான்றுகள்

 1. Copper Plates of Rajendra Chola – 1 of Thiribhuwanamadevi Chathurvedimangalam in Thanjavur, Tamil Nadu. Tamil Polil – Vol 33 (1957)
 2. Inscription of Rajendra Chola – 1 in the inner sanctum of Koneriswarer Temple at Agatheeswarem in Kanyakumari district, Tamil Nadu, India. Kanyakumari Inscriptions – edited by Nadana Kasinathan, Part 1, No 1968/120
 3. Inscription of Rajathiraja Chola – 1 at Thiruvenkadu temple in Thanjavur district, Tamil Nadu.
  Annual Report in Epigraphy (Madra) b- 1918, No.450
 4. Kalingaththu Parani – by Jeyamkondaar, edited by Puliyuur Kesikan, chapter 8, page 104.
 5. Inscription of Airlangga from Kamalaggan in East- Java – Oud-Javaansche Ookonden – Nagelaten Transscripties, van wijlen Dr. J.L.Brandes, Uitgegeven door Dr. N.J.Krom – page 120.
 6. The Nagapattinam and other Buddhist Bronzes in the Madras Museum – by T.N. Ramachandran, Joint Director-General of Archaeology, India, Page 124 & 92 – Bulletin of the Madras Government Museum, Vol VII,

11/12/18

இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுப்பு – 4
தமிழ் மலர் – 10.12.2018 – திங்கட்கிழமை

தென்கிழக்காசியாவின் மீது படை எடுத்து வந்த இராஜேந்திர சோழனால் பல அரசுகள் இடம் தெரியாமல் போய் விட்டன. அவற்றின் அடையாளங்களை இன்றுவரை தேடிக் கொண்டு இருக்கிறோம்.

அப்படிப் பாதிக்கப்பட்ட சில அரசுகள்:

கடாரம் (கெடா);

கங்கா நகரம் (பேராக்);

மாயிருண்டகம் (கோத்தா கெலாங்கி);

இலங்காசுகம் (சயாம்);

வாளைப்பந்தூர் (கிளந்தான்);

தக்கோளம் (சயாம்);

தாம்பிரலிங்கம் (சயாம்/மலாயா)

கடாரம் எனும் பூஜாங் சமவெளியைப் பொருத்த வரையில் இன்றைய வரையிலும் அகழாய்வுகள் நடந்து வருகின்றன. அதற்கும் பற்பல போராட்டங்கள் செய்ய வேண்டி உள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்து, புத்த மதக் கலைப் பொருட்கள் கிடைத்தாலும் அவை சேதம் இல்லாமல் உருப்படியாக மேலே வருவது இல்லை. கை உடைந்து; கால் உடைந்து; தோல் உரிந்து; துகில் உரிந்து வருகின்றன. அகழாய்வுகள் செய்யும் போது மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

கலைப் பணி என்பது வேறு. கட்டளைப் பணி என்பது வேறு. நாங்களும் செய்கிறோம் என்று பெயர் அளவில் பேர் போடுவது வேறு. நாங்களும் செய்வோம் என்று கண் துடைப்பதும் வேறு. மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் நியாயமாகச் செயலாற்றுவது தான் சிறப்பு.

பூஜாங் சமவெளியில் பல ஆயிரம் தொல் பொருட்கள் மீட்டு எடுக்கப்பட்டு உள்ளன. இன்னும் பல ஆயிரம் பொருட்கள் மண்ணுக்குள் புதைந்து மர்மமாய்க் கிடக்கின்றன. அவற்றை எல்லாம் மீட்டு எடுக்க வேண்டும். முறைப்படி ஆவணப் படுத்த வேண்டும்.

மலேசிய இந்தியர்களின் வரலாறு உயிர்ப்பிக்கப்பட வேண்டும். மலேசிய இந்தியர்கள் வந்தேறிகள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். அதுவே இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் இன்றையத் தலைமுறையினரின் தலையாயக் கடமையாக நிலைக்க வேண்டும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சுங்கை பட்டாணிக்கு அருகில் இருக்கும் சுங்கை பத்து எனும் இடத்தில் 16 இடங்களில் முகாம்கள் உருவாக்கப்பட்டு அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரையில் 97 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அந்த அகழாய்வுகளை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமும்; மலேசியப் பாரம்பரியப் பாதுகாப்புக் கழகமும் இணைந்து நடத்தி வருகின்றன.

அண்மையில் அந்த முகாம்களுக்குச் சென்று இருந்தேன். அகழாய்வுப் பணிகளைப் பார்த்தேன். நல்ல அரிய பெரிய முயற்சிகள்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்பாண்டங்கள்; செங்கல்களுக்குப் பதிவு எண்களை வழங்கி பட்டியல் தயாரித்துக் கொண்டு இருந்தார்கள்.

இந்த மண்பாண்டங்கள் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அதாவது 1900 ஆண்டுகள் பழைமையானவை.

Sungai Batu Archaeological Complex – https://www.nst.com.my/…/…/05/147317/ancient-seaport-sg-batu

சுங்கை பத்துவில் ஓர் இடத்தில் ஒரு பெரிய சதுப்புநிலப் பாசா காடு. மூங்கில் காடுகளும், காண்டா காடுகளும், முட்புதர்களும், கோரைச் செடிகளும் நிறைந்த ஓர் இடம். எண்ணெய்பனைத் தோட்டம். அருகிலேயே மூன்று நான்கு அகழாய்வு மையங்கள் இருந்தன.

அந்தப் பாசா காடு தான் முன்பு காலத்தில் தென்னிந்தியர்களின் வணிகக் கப்பல்கள் கரை அணைந்த இடம் என்று கேள்விப் பட்டேன். அதாவது அணைக்கரை அல்லது படகுத் துறை. இதே போல 12 வெவ்வேறு இடங்களில் படகுத் துறைகள் உள்ளன. கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

சுங்கை பத்து அகழாய்வு இடங்களைப் பாதுகாக்கும் பாதுகாவலர்களும் வழிகாட்டிகளும் சொன்னார்கள். திகைத்து மலைத்துப் போனேன். பின்னர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் டத்தோ டாக்டர் மொக்தார் சைடின் என்பவரைத் தொலைபேசி மூலமாக அழைத்துப் பேசினேன். அவரும் உறுதிபடுத்தினார்.

அந்த இடம் இப்போது மனித நடமாட்டம் எதுவும் இல்லாமல் வெறுச்சோடிப் போய்க் கிடக்கிறது. ஒரு பெரிய ஆறு ஓடிய இடத்தில் ஒரு கட்டுத் தூணும் இல்லை. ஒரு பொட்டுச் சுவடும் இல்லை.

பெரிய பெரிய மரக் கலங்கள் நங்கூரம் போட்ட துறைமுகம் இப்போது கோரைப் புற்களால் காடு மண்டிக் கிடக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அந்த இடம் ஒரு பெரிய வரலாற்றையே பேசி இருக்கிறது. நம்பவே முடியவில்லை.

அந்தத் துறைமுகத்தில் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விஜயதுங்க வர்மன் ஊர்க்கோலம் போய் இருக்க வேண்டும். ராஜா லிங்கயோகன் அதிகாரம் செய்து இருக்க வேண்டும். இராஜேந்திர சோழன் வெற்றி நடை போட்டு இருக்க வேண்டும்.

கடாரத்து இளவரசர்களும் இளவரசிகளும் துயில் கொண்டு இருக்க வேண்டும். இந்து சமயமும் புத்த சமயமும் காவியங்கள் பாடி இருக்க வேண்டும். கோடிக் கோடியாய் வாணிகம் நடந்து இருக்க வேண்டும். நினைத்துப் பார்க்கிறேன். நெஞ்சம் கனக்கிறது.

ராஜா லிங்கயோகன் என்பவர் தான் கங்கா நகரத்தின் கடைசி மன்னர். கடாரத்தையும் ஆட்சி செய்தவர். ஸ்ரீ விஜய பேரரசர் விஜயதுங்க வர்மன் நியமித்த அரசப் பிரதிநிதி.

சுங்கை பத்து சதுப்பு நிலத்தின் ஒதுக்குப் புறமான இடத்தில் ஒரு கொட்டகை. அந்தக் கொட்டகையில் அமர்ந்தவாறு விஜயதுங்க வர்மனையும் இராஜேந்திர சோழனையும் கற்பனை செய்து பார்த்தேன். மனசு வலிக்கத் தொடங்கியது.

என்னுடன் வந்த நண்பரைத் தேடினேன். படம் பிடிப்பதில் தீவிரமாக இருந்தார். உற்ற நண்பராக இருந்து அனைத்து உதவிகளையும் செய்த அவருக்கு இந்தச் சமயத்தில் நன்றி கூறுகிறேன்.

இந்தப் பக்கம் கோத்தா கெலாங்கியைப் பொருத்த வரையில் முழுமையான ஆய்வுகள் இன்னும் முறையாக நடைபெறவில்லை.

உலகப் புகழ் ஸ்ரீ விஜய பேரரசின் சிதைந்து போன வரலாற்றுச் சான்றுகள் அங்கே மறைந்து போய்க் கிடக்கின்றன. மண்ணுக்குள் நூறு நூற்றைம்பது அடி ஆழத்தில் அந்தச் சான்றுகள் மர்மமாய் கிடக்கின்றன. அடர்ந்த காடுகளுக்குள் இன்னும் ஆயிரமாயிரம் தடயங்கள் மாயஜாலங்கள் காட்டி வருகின்றன.

எந்த ஒரு வனப் பகுதியிலும் நூறு ஆண்டுகளுக்கு பத்து அடி உயரத்திற்கு தூசியும் துகளும் சேரும். ஆயிரம் ஆண்டுகள் என்றால் 50 அடியில் இருந்து 100 அடி ஆழத்திற்கு தூசி துகள்கள் சேர்ந்து இருக்கும். அங்கே இருந்த கட்டுமானங்களை மண்ணிற்குள் ஆழ்த்திவிடும்.

தொலைத் தொடர் உணர்தல் வழி (Remote Sensing) மூலமாக விண்வெளிப் படங்கள் எடுத்து மண்ணுக்குள் புதைந்து இருக்கும் கோட்டைக் கோபுரக் கட்டுமானங்களைக் கண்டு அறியலாம். அல்லது நுண்காலக் கணிப்பு முறை; கதிரியக்க ஆயுள் கணிப்பு முறை மூலமாகவும் கண்டு அறியலாம்.

Chronometric Dating (Radio carbon and Optically Stimulated Luminescence or OSL technique)

ரேய்மி செ ரோஸ் என்பவர் ஒரு மலேசிய வரலாற்று ஆய்வாளர். பன்னிரண்டு ஆண்டுகள் கோத்தா கெலாங்கியைப் பற்றி ஆய்வுகள் செய்து இருக்கிறார். இப்போது அந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டு விட்டன. ஆய்வுகள் செய்த ரேய்மி செ ரோஸ் இப்போது ஆஸ்திரேலியாவில் நல்ல ஒரு பதவியில் இருக்கிறார்.

அதைப் பற்றி பக்கம் பக்கமாய் எழுதிய தி ஸ்டார் நாளிதழும் மௌனம் சாதிக்கிறது. ஏன் என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். மன்னிக்கவும். தயவு செய்து என்னைக் கேட்க வேண்டாமே.

இருந்தாலும் ஜொகூர் உலு திராம் பகுதியில் மலாயாத் தமிழர் வரலாற்று மீட்பு குழு தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. அதன் பொறுப்பாளராகக் கணேசன் என்பவர் சேவை செய்து வருகிறார். கோத்தா கெலாங்கி வரலாற்றுத் தேடலில் தீவிரமாகக் களம் இறங்கி இருக்கிறார். அந்தக் குழுவின் ஆலோசகராகத் தெரிந்த விசயங்களை அடியேன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கோத்தா கெலாங்கி அடர்ந்த காடுகளுக்குள் சென்று பூர்வீகக் குடிமக்களைக் கணேசன் சந்தித்துப் பேசுகிறார். நேரடியாகப் பார்த்த கோட்டைச் சுவடுகளைப் பற்றிய தகவல்களை ஆவணப் படுத்தியும் வருகிறார்.

அந்த வகையில் கணேசனின் அரிய முயற்சிகளினால் அங்கே அடர்ந்த காட்டிற்குள் புராதன கருங்கல் கோட்டை இருப்பதும் தெரிய வந்தது. இவை எல்லாம் மீட்டு எடுக்கப்படும் இந்திய வரலாறுகள். கணேசனுக்கு நன்றிகள்.

இராஜேந்திர சோழனால் பாதிக்கப்பட்ட சிற்றரசுகள் அல்லது பேரரசுகளின் வரிசைப் பட்டியல் வருகிறது. கவனியுங்கள்.

 1. சுமத்திரா பலேம்பாங் – ஸ்ரீ விஜய பேரரசு
 2. தென் சுமத்திரா – மேவிழி பங்கம்
 3. வட சுமத்திரா – பண்ணை சிற்றரசு
 4. வட சுமத்திரா – இளமுரி தேசம்
 5. கிழக்கு சுமத்திரா – ஜம்பி
 6. கிழக்கு சுமத்திரா – மலையூர்
 7. மத்திய ஜாவா – சைலேந்திரா பேரரசு
 8. மலாயா ஜொகூர் – மாயிருடிங்கம் கோத்தா கெலாங்கி
 9. மலாயா பேராக் – புருவாஸ்
 10. மலாயா பேராக் – பீடோர்
 11. மலாயா பேராக் – ஈப்போ பெங்காலான்
 12. மலாயா கெடா – கடாரம்
 13. மலாயா தென் தாய்லாந்து – இலங்காசுகம்
 14. மலாயா தென் தாய்லாந்து – தாம்பரலிங்கம்
 15. தென் தாய்லாந்து – தலைத் தக்கோளம்
 16. தென் பர்மா – மாப்பாளம்
 17. அந்தமான் நிக்கோபார் – நாகாவரம்

அந்த அரசுகளில் புகழ்பெற்று விளங்கிய பெரும்பாலான நகரங்களும் தலைநகரங்களும் அழித்து ஒழிக்கப்பட்டு விட்டன. போதாக் குறைக்கு அரசர்கள் பலர் பிடிபட்டனர்.

ஸ்ரீ விஜய பேரரசின் மகாராஜா சங்கராமா விஜயதுங்க வர்மன் என்பவரும் பிடிபட்டு சிறை வைக்கப் பட்டார். இவருடைய மகள் ஓனாங் கியூ என்பவரை இராஜேந்திர சோழன் மணம் புரிந்து கொண்டார்.

Coedes, George (1996). The Indianized States of Southeast Asia. University of Hawaii Press. pp. 142&143

இராஜேந்திர சோழனின் தாக்குதலுக்குப் பின்னர் ஸ்ரீ விஜய பேரரசு உயிர் வாழ்ந்தது. ஆனால் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை. ஸ்ரீ விஜய பேரரசு ஒரு தலைவர் இல்லாமல் தடுமாறிப் போனது. அத்துடன் பக்கத்துப் பக்கத்து அரசுகளின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியவில்லை..

1377-ஆம் ஆண்டில் உலக வரலாற்றில் இருந்து மறைந்து போனது. அத்துடன் ஸ்ரீ விஜய பேரரசின் பேரும் புகழும் ஒரு முடிவிற்கு வந்தன.

அதன் பின்னர் 500 ஆண்டுகளுக்கும் மேல் ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி யாருக்கும் எவருக்கும் எதுவும் தெரியாமல் இருந்தது. 1918-ஆம் ஆண்டு பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் ஜார்ஜ் கோடேஸ் என்பவர் கண்டுபிடித்துச் சொல்லும் வரையில் ஸ்ரீ விஜய பேரரசு ஒரு மர்மமாகவே மறைந்து இருந்தது.

Buddhism, Diplomacy, and Trade: The Realignment of Sino-Indian Relations by Tansen Sen p.226

14-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய பேரரசிற்கும் மஜபாகித் பேரரசிற்கும் அடிக்கடி மோதல்கள். ஸ்ரீ விஜய பேரரசிற்குத் தோல்வி மேல் தோல்வி. மஜபாகித் பேரரசு வெற்றி வாகை சூடியது. அதன் பின்னர் ஸ்ரீ விஜய பேரரசு வரலாற்றில் இருந்து மங்கிப் போனது. அங்கே இருந்து தப்பி வந்த இளவரசர் நீல உத்தமன் தான் சிங்கப்பூரை உருவாக்கினார். அவருடைய கொள்ளுப் பேரன் பரமேஸ்வரா தான் மலாக்காவை உருவாக்கினார். சரிங்களா.

மலாயாவின் முந்தைய வரலாறும் சரி; இப்போதைய வரலாறும் சரி; இரண்டுமே பெரும்பாலும் ஸ்ரீ விஜய வரலாற்றையும் மஜபாகித் வரலாற்றையுமே சார்ந்து பயணிக்கின்றன. அப்படித்தான் சொல்ல முடிகிறது.

கெடா வரலாறு மாறன் மகாவம்சனைச் சார்ந்து போகிறது. அதே சமயத்தில் மலாக்கா சுல்தானகத்தையும் சார்ந்தும் போகிறது. அதே போல ஜொகூர் வரலாறு மலாக்கா சுல்தானகத்தைச் சார்ந்து நிற்கிறது. ஆக எப்படித் தான் சுற்றிச் சுற்றி வந்தாலும் மலாயா வரலாறு ஸ்ரீ விஜய வரலாற்றைத் தாண்டிப் போக முடியாத நிலையில் தான் மௌனம் சாதிக்கிறது.

இராஜேந்திர சோழனின் படையெடுப்பு உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு சோகமான காலச் சுவடு. அந்தச் சோகமான வரலாற்றுக் கீறல்களை வருடிப் பார்க்கும் போது என் நெஞ்சம் கனக்கிறது. சத்தம் இல்லாமல் அழவும் செய்கிறது.

(தொடரும்)

சான்றுகள்

 1. Sri Vijaya; Mevilibangkam, Pannai; Jambi; Malaiyur; Shailendra; Kota Gelanggi; Bruas; Bidor; Pengkalan; Kadaram; Langkasuka; Tambralinga; Talaittakkolam; Mapappalam; Nakkavaram
 2. Maran Vijaya Ttunga Varman; Onang Kiu; Kahuripan; Dharma prasadottunga devi; Airlangga; Srivijayasrama; George W. Spencer; Datuk V. Nadarajan
 3. Balasubrahmanyam, S. R., B. Natarajan, B. Venkataraman, and B. Ramachandran. Later Chola Temples Kulottunga I to Rajendra III (A.D. 1070-1280). Madras: Mudgala Trust, 1979.
 4. Nilakanta Sastri, K. A. A History of South India from Prehistoric Times to the Fall of Vijayanagar. Madras: Indian Branch, Oxford University Press, 1966.
 5. Spencer, George W. Royal Leadership and Imperial Conquest in Medieval South India The Naval Expedition of Rajendra Chola I, C. 1025 C.E. 1967.

8/12/18

இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுப்பு – 3
தமிழ் மலர் – 08.12.2018 – சனிக்கிழமை

இராஜாராஜ சோழன் இறந்து 11 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுப்பு நடத்தி இருக்கிறார். புலிக்குப் பிறந்தது பூனை ஆகாது என்பார்கள். உண்மைதான்.

இராஜாராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழனும் சற்றும் சளைத்தவர் அல்ல. உள்நாட்டிலும் சரி; வெளிநாடுகளிலும் சரி; பற்பல போர்களில் ஈடுபட்டவர். வெற்றி வாகை சூடியவர்.

ஆனால் அத்தனையுமே மனித நேயங்களைப் புறம் தள்ளிய போர்களப் புறப்பாடுகள். கங்கையில் தொடங்கி கடாரம் வரையில் போர்ப் பயணங்கள் போர் முரசு கொட்டுகின்றன. சரி.

பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி இப்படி எழுதி இருக்கிறார். அவர் என்ன எழுதி இருக்கிறார். அதையும் பார்ப்போம்.

சீனாவுக்கு தெற்கே பல நாடுகள் இருந்தன. அவை ஸ்ரீ விஜயத்திற்குச் சொந்தமான நாடுகள் அல்லது நெருக்கமான உறவு முறைகளைக் கொண்ட நாடுகள்.

 1. அருமண நாடு
 2. கம்போஜ தேசம்
 3. மனகவரம்
 4. தலைத்தக்கோளம்
 5. மாப்பாளம்
 6. மாயிருடிங்கம்
 7. இலங்காசுகம்
 8. தாம்பிரலிங்கம்
 9. இளமூர்திதேசம்

இந்த நாடுகள் அனைத்துமே செல்வத்திலும் வளப்பத்திலும் பேர் பெற்ற நாடுகள். அவற்றில் ஒரு நாடு கடாரம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

இவை எழுத்தாளர் கல்கி எழுதிய வாசகங்கள். இதில் மாயிருடிங்கம் எனும் பெயர் வருகிறதே கவனித்தீர்களா. அதுதான் ஜொகூர் மாநிலத்தின் தென்பகுதியில் இருக்கும் கோத்தா கெலாங்கி என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மாயிருடிங்கம் எனும் பெயரும் பலரும் அறியாத பெயர். இன்னும் ஒரு விசயம். இதுவும் சற்றே மயக்கத்தை ஏற்படுத்தும் வரலாற்றுப் பதிவாகத் தெரிகின்றது. ஏன் என்றால் இன்னும் ஓர் ஆசிரியர் (வீரராஜேந்திரா) மலையூர் என்பது தான் கோத்தா கெலாங்கி என்கிறார்.

நீலகண்ட சாஸ்திரிகள், ஸ்பென்சர், கோடெஸ், மஜும்டார், குப்தா போன்றவர்கள் இந்திய வரலாற்று ஜாம்பவான்கள். இவர்களின் நூல்களைப் படித்து ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வரும்போது கோத்தா கெலாங்கிக்கு மலையூர் எனும் மற்றொரு பெயர் இருந்ததாகவும் தெரிய வருகிறது.

சற்றே குழப்பம். இதைக் கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு இராஜாராஜா சோழனின் கதைக்கு வருவோம்.

இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுப்பு நடத்தியது என்பது கடாரத்தில் தொடங்கவில்லை. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடங்குகின்றன. முதல் தாக்குதல் அங்கே தான் தொடங்கியது.

அந்தமான் தீவைக் கைப்பற்றிய பின்னர் அங்கே நூறு போர் வீரர்களைப் பாதுகாப்பிற்கு வைத்துவிட்டுத் தான் இராஜேந்திர சோழனின் பயணம் தொடர்ந்து இருக்கிறது.

ஏற்கனவே சொன்னது போல சிங்கப்பூரைச் சேர்ந்த வீரராஜேந்திரா எனும் வரலாற்று ஆசிரியர் வேறு மாதிரியாகக் கூறுகிறார். இராஜேந்திர சோழப் படையினரை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார். நிக்கோபார் தீவில் இருந்து ஒரு படையினர் தாய்லாந்தின் தென் மேற்கே இருக்கும் தக்கோளத்தைத் தாக்குவது.

இன்னொரு படையினர் கடாரத்தைத் தாக்குவது. மூன்றாவது படையினர் பலேம்பாங்கில் இருக்கும் ஸ்ரீ விஜயப் பேரரசைத் தாக்குவது. கடாரத்தைத் தாக்குவதற்கு இராஜேந்திர சோழன் பொறுப்பு. ஸ்ரீ விஜயப் பேரரசைத் தாக்குவதர்கு பிரம்மராயர் என்பவர் பொறுப்பு.

ஆக வரலாற்று ஆசிரியர் வீரராஜேந்திராவின் கருத்துகள் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. இருப்பினும் நான் இங்கே நீலகண்ட சாஸ்திரிகளின் பதிவுகளையே முன் வைக்கிறேன்.

ஏன் என்றால் நீலகண்ட சாஸ்திரிகளின் பதிவுகளைப் போலவே ஸ்பென்சர், கோடெஸ், மஜும்டார் வரலாற்று ஆசிரியர்களும் பதிவு செய்து இருக்கின்றனர். இந்த ஆசிரியர்களின் பதிவுகளின் அடிப்படையில் தான் நம் கட்டுரையும் தொடர்கிறது.

இராஜேந்திர சோழப் படையினர், வங்காள விரிகுடாவைத் தாண்டி சுமாத்திராவின் வடக்கே உள்ள ஆச்சே துறைமுகத்தை அடைந்து இருக்கிறார்கள். ஆனால் ஆச்சே துறைமுகத்தில் நங்கூரம் இடவில்லை. இராஜேந்திர சோழனின் படைகள் தற்காலிகமாக லாமூரி எனும் இடத்தில் நங்கூரம் போட்டு இருக்கின்றன.

இந்த லாமூரி துறைமுகத்திற்கும் கடாரத்திற்கும் உள்ள தொலைவு 700 கி.மீ. இந்தக் கட்டத்தில் கடாரக் கடல் பகுதியில் ஸ்ரீ விஜய கடல் படை இராஜேந்திர சோழனின் படைகளுக்காகக் காத்து நின்றன.

அப்படியே இராஜேந்திர சோழனின் படைகள் அங்கே போய் இருந்தால் சோழனின் படைகள் தோற்கும் வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லலாம். ஏன் என்றால் இராஜேந்திர சோழனின் படைகளை விட ஸ்ரீ விஜய கடல் படை பெரியது. அதிக வலிமை வாய்ந்தது. இந்தக் கருத்தை வரலாற்று ஆசிரியர்கள் பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

லாமூரியில் இருந்து இராஜேந்திர சோழனின் கடல் படை மேற்கு பக்கமாய் திரும்பி இருக்கிறது. அப்படியே இந்தியப் பெரும் கடல் வழியாகப் பாரூஸ் எனும் துறைமுகத்தை அடைந்து இருக்கிறது. லாமூரிக்கும் பாரூஸுக்கும் உள்ள தூரம் 800 கி.மீ.

இந்தப் பாரூஸ் துறைமுகம் தமிழகத்தின் வணிகர்களுக்குச் சொந்தமான துறைமுகம். இந்தியப் பெரும் கடல் வழியாக வந்த தென்னிந்தியக் கப்பல்கள் இந்தத் துறைமுகத்தில் தான் அணைந்து தங்களுக்கு வேண்டிய குடிநீரைப் பெற்றுக் கொள்ளும். சில நாட்கள் தங்கி இருக்கும். அதன் பின்னர் தான் இந்தோனேசியாவின் மற்ற மற்ற இடங்களுக்குச் செல்லும்.

இராஜேந்திர சோழனின் கடல் படை பாரூஸ் துறைமுகத்தில் இருந்து கீழே தெற்கு திசையில் பயணித்து சுந்தா நீரிணையை அடைந்தது.

இந்தச் சமயத்தில் ஸ்ரீ விஜய கடல் படை மலாக்கா நீரிணையில் கடாரக் கடல் பகுதியில் தற்காப்பு நிலையில் இருந்தது. சொல்லி இருக்கிறேன். ஏறக்குறைய ஸ்ரீ விஜய 1000 போர்க் கப்பல்கள். நூற்றுக்கு எண்பது விழுக்காட்டுப் போர்க் கப்பல்கள் கடாரத்திற்குப் போய் விட்டன. சில நூறு கப்பல்கள் மட்டுமே சுமத்திராவில் இருந்தன.

இராஜேந்திர சோழனின் கடல் படை முதல் தாக்குதலைப் பலேம்பாங் நகர் மீது நடத்தியது. பலேம்பாங் நகரம் சுமத்திரா தீவின் தென் பகுதியில் சிங்கப்பூருக்குக் கீழே இருக்கிறது. பலேம்பாங் சிங்கப்பூரில் இருந்து 600 கி.மீ. தொலைவில் உள்ளது.

படையெடுப்பின் போது பலேம்பாங்கில் இருந்த சூடாமணி அரண்மனை சூறையாடப் பட்டது. அந்தச் சமயத்தில் பேரரசராக இருந்தவர் சங்கராமா விஜயதுங்க வர்மன். இவர் ஸ்ரீ விஜயப் பேரரசர். கடாரத்தின் அரசராகவும் இருந்தார். இவர் சூடாமணி அரண்மனையில் தான் இருந்தார். இவரும் சிக்கிக் கொண்டார். கையும் களவுமாய்ப் பிடிபட்டார்.

கோடிக் கோடி மதிப்புள்ள அரண்மனை நவரத்தினக் கற்களும் வைர வைடூரிய மணிகளும் கபளீகரம் செய்யப் பட்டன. அவற்றுள் மிக முக்கியமானது வித்தியதார தோரணம் எனும் தங்க வாசல் கதவு. அதுவும் பெயர்த்து எடுக்கப் பட்டது.

Vidhyadara Torana the jeweled war gate of Srivijaya

இந்தத் தங்கவாசல் அசல் சுத்தமான தங்கத்தால் செய்யப் பட்டது. அதன் எடை நான்கு டன்கள். இப்போதைய விலையில் சொன்னால் என்ன ஒரு 120 கோடி ரிங்கிட் தான்.

பலேம்பாங் நகரம் முழுமையாகக் கொள்ளை அடிக்கப் பட்டது. அப்படிச் சொல்வதைவிட பலேம்பாங் முற்றாகச் சூறையாடப் பட்டது என்று சொன்னால் தான் சரியாக அமையும். பலேம்பாங்கில் இருந்த புத்த விகாரங்களும் கோபுரங்களும் புத்த ஆலயங்களும் நாசம் செய்யப் பட்டன.

சூடாமணி அரண்மனையில் இருந்த யானைகளைக் கொண்டே அங்கு இருந்த பொன்னும் மணிகளும் மூட்டை மூட்டைகளாகக் கட்டப் பட்டு இராஜேந்திர சோழனின் கப்பல்களில் ஏற்றப் பட்டன. பலேம்பாங் துறைமுகத்தில் இருந்த ஸ்ரீ விஜய படைக் கப்பல்களும், வணிகக் கப்பல்களும் பறிமுதல் செய்யப் பட்டன. இராஜேந்திர சோழனின் கப்பல் படையில் சேர்க்கப் பட்டன.

அடுத்து கிழக்கு சுமத்திராவில் இருந்த மலையூர் சிற்றரசு சிக்கிக் கொண்டது. சோழர் படையின் பயங்கரமான தாக்குதல்களுக்கு இலக்கானது. மலையூர் சிற்றரசு பலேம்பாங்கில் இருந்து 300 கி.மீ. தொலைவில் இருந்த ஒரு குட்டி அரசு. இதற்கு தர்மசிராயா அரசு (Dharmasraya Kingdom) எனும் பெயரும் ஜாம்பி அரசு (Jambi Kingdom) எனும் பெயரும் உள்ளன. நல்ல வளப்பம் மிக்க சிற்றரசு.

மலையூர் சிற்றரசு; கோத்தா கெலாங்கி மலையூர் சிற்றரசு; இந்த இரண்டுமே மலையூர் எனும் பெயரில் குழப்பங்களை உண்டாக்குகின்றன. அந்தக் காலத்துத் தமிழர்களும் சரி; தமிழ் மொழி பேசுபவர்களும் சரி; மலைகள் நிறைந்த இடமாக இருந்தால் அதற்கு மலையூர் எனும் பெயரையே வைத்து இருக்கிறார்கள். அப்படித்தான் மலாயாவுக்கு மலையூர் எனும் பெயர் வைக்கப் பட்டது.

மலையூர் என்பது மலையகம் என்று மாறி கடைசியில் மலாயா என்று பெயர் பெற்றது. இப்போது மலேசியா என்று உயர்வுநிலை அடைந்து நிற்கிறது. ஆக மலாயா எனும் சொல் மலை எனும் சொல்லில் இருந்து உருவானது. இதை யாரும் மறக்க வேண்டாம்.

மலை; ஊர்; எனும் இரு சொற்கள் இணைந்து மலையூர் எனும் பெயர் வந்து இருக்கலாம் என்று பார்பரா வெயிட்மேன் எனும் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். இன்னும் ஒரு கருத்து. மலையூர் என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

உலகப் புகழ்பெற்ற பொத்தொலாமி என்பவர் மலையூர் என்பதை மலைக் கோளம் என்கிறார். அது மட்டும் அல்ல. மலைக் கோளம்; மலைக்கூரம் எனும் சொற்களில் இருந்து மலாய் எனும் சொல் உருவாகி இருக்கலாம்.

அல்லது மலை எனும் சொல்லில் இருந்து மலாய் எனும் சொல் உருவாகி இருக்கலாம் என்றும் அவர் சொல்கிறார். மலையூர் பற்றி பின்னர் ஒரு கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.

Weightman, Barbara A. (2011). Dragons and Tigers: A Geography of South, East, and Southeast Asia. p. 449. ISBN 9781118139981.

இந்து புராணங்களில் வாயு புராணம் என்பது ஒரு புராணம். அந்த வாயு புராணத்தில் மலாயா தீபம் (Malaya Dvipa) எனும் சொற்கள் வருகின்றன. அதையும் நினைவு படுத்துகிறேன். சரி.

அதன் பின்னர் சோழர்களின் படை தென் பக்கமாய் இறங்கி அப்படியே மலாக்கா நீரிணைக்குள் நுழைந்து இருக்கிறது. அந்தச் சமயத்தில் வட சுமத்திராவில் இருந்த பண்ணை சிற்றரசு முதலில் மாட்டிக் கொண்டது. இந்தச் சிற்றரசை பண்ணை என்றும் அழைக்கிறார்கள். பண்ணாய் என்றும் அழைக்கிறார்கள். பன்னெய் என்றும் அழைக்கிறார்கள்.

இது ஒரு புத்த மதத்தைச் சார்ந்த சிற்றரசு. 11-ஆம் நூற்றாண்டில் இருந்து 14-ஆம் நூற்றாண்டு வரை சுமத்திராவில் அரசாட்சி செய்த ஓர் அரசு. இராஜேந்திர சோழன் படையெடுப்பு நடத்திய பின்னர் இந்தச் சிற்றரசு நிலைகுலைந்து போனது. இருந்தாலும் சன்னம் சன்னமாய் பழைய நிலைக்குத் திரும்பியது.

சோழர்கள் படைக்கு ஸ்ரீ விஜய படைகள் பலத்த எதிர்ப்புகளைக் கொடுத்தன. ஒரு கட்டத்தில் இராஜேந்திர சோழன் பின் வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அவனுடைய படையில் பாதி பேர் பலியானதாக வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரிகள் சொல்கிறார்.

இருந்தாலும் சோழர்கள் படையினர் இந்தோனேசியாவில் இருந்த ஒவ்வோர் அரசையும் சூறையாடி இருக்கின்றனர். சூறையாடல் என்று சும்மா சொல்லக் கூடாது.

எல்லாம் காய்ந்த மாடுகள் கம்பம் கதிரில் புகுந்த மாதிரியும்; காய்ந்த புலிகள் ஆட்டு மந்தையில் விழுந்தது மாதிரியும் தான். போர் வீரர்கள் ஆளாளுக்கு உசுப்பேறி இரத்தம் பார்க்காமல் கத்தி கப்படாக்களைத் தூக்கி இருக்கின்றனர். அட்டகாசமான துவம்சங்களின் உச்சக் கட்டங்கள் அரங்கேற்றம் கண்டுள்ளன.

சான்றுகள்

 1. Power and Plenty: Trade, War, and the World Economy in the Second Millennium by Ronald Findlay,Kevin H. O’Rourke p.67
 2. R. C. Majumdar (1961), “The Overseas Expeditions of King Rajendra Cola”, Artibus Asiae 24 (3/4), pp. 338-342.
 3. Majumdar, R. C. (1937). Ancient Indian colonies in the Far East. 2: Suvarnadvipa. Dacca: Ashok Kumar Majumdar. pp. 167–190.
 4. W. Linehan (1951). “The Identifications of Some of Ptolemy’s Place Names in the Golden Khersonese” (PDF).
 5. Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. xxiv (III): 86–98. Archived from the original (PDF).
 6. Arokiaswamy, Celine W.M. (2000). Tamil Influences in Malaysia, Indonesia, and the Philippines. Manila s.n. p. 46.
 7. Sastri, K. A. Nilakanta [1935]. The Colas. Madras University .

7/12/18

Muthukrishnan Ipoh
December 7, 2018 ·
ஐசெர்ட் என்றால் என்ன?
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

ஐசெர்ட் (ICERD) என்றால் International Convention on the Elimination of All Forms of Racial Discrimination. தமிழில் அனைத்து இனப் பாகுபாடுகளை அகற்றும் அனைத்துலக ஒப்பந்தம்.

1965 டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி ஐ.நா. சபை முன்மொழிந்த ஒரு திட்டம். 1969 ஜனவரி 4-ஆம் தேதி அமலுக்கு வந்தது.

மனித இனப் பாகுபாடுகளைத் தவிர்ப்பது; அனைத்து மனித இனங்களுக்கும் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவது; இனங்களுக்கு இடையே வெறுப்பு உணர்வுகளைத் தூண்டும் பேச்சுகளுக்குத் தடை செய்வது; மனித இனங்களுக்கு இடையில் நிரந்தரமான நட்புறவை வளர்ப்பது; இவற்றையும் தாண்டிய நிலையில்…

இனம், மொழி, கலாசாரம், நிறம் என்று மனித இனத்தைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. மனிதர்களில் எவரும் உயர்ந்தவர்கள் இல்லை; தாழ்ந்தவர்கள் இல்லை. மனிதர்கள் அனைவரும் மனிதர்களே.

மனிதர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு மனிதர் இன்னொரு மனிதரை மதிக்க வேண்டும். அவரின் தனிப்பட்ட மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அவற்றுக்கான ஒரு முன்னோடித் திட்டமே ஐ.நா.வின் ஐசெர்ட் திட்டம் ஆகும்.

ஒரே சொல்லில் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் அனைத்துலகத் திட்டம் என்று சொல்லலாம்.

சான்று: https://www.ohchr.org/…/ProfessionalInterest/Pages/CERD.aspx

உலகில் 197 நாடுகள் ஐ.நா. சபை அங்கீகரித்த நாடுகள். அவற்றுள் 179 நாடுகள் இந்த ஐசெர்ட்டில் கையொப்பம் வைத்து உறுதி படுத்தி உள்ளன. 14 நாடுகள் கையொப்பம் வைக்கவில்லை. அவற்றுள் மலேசியாவும் ஒரு நாடு.

மியன்மார், தென் சூடான், வட கொரியா, வானுவாத்து (Vanuatu), கூக் தீவுகள் (Cook Islands), மார்ஷல் தீவு (Marshall Islands), கிரிபாத்தி (Kiribati), சமோவா (Samoa), நியூ (Niue), துவாலு (Tuvalu) ஆகிய நாடுகள் இன்னும் கையொப்பம் வைக்கவில்லை.

அங்கோலா, பூத்தான், நவுரு (Nauru), பாலாவ் (Palau) ஆகிய நாடுகள் கையொப்பம் வைத்து விட்டாலும்; அந்தக் கையொப்பங்களை உறுதி படுத்தாமல் உள்ளன.

1960-ஆம் ஆண்டுகளில் இனப் பாகுபாடு; சமயச் சகியாமை பெருகி வந்தன. அவற்றைச் சரி செய்யவே ஐசெர்ட் ஒப்பந்தம் முன்வைக்கப் பட்டது. 1965-ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் ஐ.நா. சபை நாடுகளால் ஒருமித்தமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மலேசியா; புருணை ஆகிய இரு நாடுகள் ஐசெர்ட் ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்து இடவில்லை.

அரபு கூட்டமைப்பில் உள்ள 22 அரபு நாடுகளும் ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய இஸ்லாமிய நாடுகளும் ஐசெர்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உறுதி செய்து விட்டன.

கையொப்பம் வைத்த பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் நாட்டுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாது எனும் கருத்தை முன்வைக்கின்றன. அமெரிக்காவும் சில விதி முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும் கைபொப்பம் வைத்து விட்டது.

உலகின் பல நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வைத்துவிட்டாலும் ஒரு சில விதிமுறைகளுக்குக் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

2017 நவம்பர் மாதம் சிங்கப்பூர் கையொப்பம் வைத்தது. இருப்பினும் தன் சொந்த கொள்கைகளை (வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவகாரத்தில்) விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக இருக்கிறது.

சீனா, இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் சில விதிமுறைகளுக்குக் கட்டுப்படவில்லை. ஐசெர்ட் பிரச்சினைகளை அனைத்துலக நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல இயலாது என்று அந்த நாடுகள் சொல்கின்றன.

பாஸ் கட்டுப்பாட்டில் உள்ள கிளந்தான் அரசாங்கம் டிசம்பர் 8-ஆம் தேதியில் கோலாலம்பூரில் பேரணி நடைபெறுவதால் மறுநாள் டிசம்பர் 9-ஆம் தேதியை ஒரு விடுமுறை நாளாக அறிவித்து உள்ளது.

விடுமுறை அளித்தால் கிளந்தான் மக்கள் கோலாலம்பூர் பேரணியில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும்; அத்துடன் கூட்டரசு அரசாங்கம் செய்து உள்ள முடிவைக் கொண்டாடுவதற்காக அந்தப் பேரணி நடத்தப் படுவதாகவும் கிளந்தான் மந்திரி புசார் அகமட் யாகூப் கூறி இருக்கிறார்.

ஐசெர்ட் பேரணியில் தெளிவற்ற நோக்கமே புலப் படுகிறது. அரசியல் நோக்கமே பிரதானமாகத் தெரிகின்றது. அரசாங்கம் ஐசெர்ட் மாநாட்டில் கையொப்பமிடாது என்று அறிவித்தும் அதனை எதிர்க்கும் ஒரு சில தரப்பினரின் ஏற்பாடுகள் தேவையற்றவை என்பதே என் கருத்து.

5/12/18

இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுப்பு – 1 (தமிழ் மலர் – 05.12.2018)

இராஜேந்திர சோழனின் தென்கிழக்காசிய நாடுகள் மீதான படையெடுப்பு உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு சோகமான காலச் சுவடு. அதுவே மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் வேதனைகள் நிறைந்த காலப்பதிவு.

இராஜேந்திர சோழன் கி.பி. 1025-ஆம் ஆண்டு தென்கிழக்காசிய நாடுகள் மீது படை எடுத்தான்.

அந்தப் படையெடுப்பினால் தென்கிழக்காசியாவில் பல இந்தியர் அரசுகள் அழிந்து போயின. அந்த அரசுகள் இன்றைய வரைக்கும் அரிச்சுவடிகளைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றன.

இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்ததைப் பெருமையாகப் பேசுகிறோம். தப்பு இல்லை. ஒரு காலக் கட்டத்தில் உலகத்திலேயே மாபெரும் கடல் படையைக் கொண்ட வல்லரசு நாடாகச் சோழப் பேரரசு விளங்கியது.

உண்மை. பல நாடுகளைத் தங்களின் இரும்புக் கரங்களால் வளைத்துப் போட்டு ஆட்சி செய்தது. உண்மை.

ஆனால் அந்தப் படையெடுப்பு நிகழாமல் இருந்து இருக்குமானால் கடாரத்தில் இந்தியர்களின் ஆளுமை உச்சம் பார்த்து இருக்கும். கங்கா நகரம் அழிந்து போய் இருக்காது. கோத்தா கெலாங்கி காணாமல் போய் இருக்காது. ஸ்ரீ விஜய பேரரசு அழிந்து போய் இருக்காது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

இராஜேந்திர சோழனின் படையெடுப்பைப் பெருமை பேசுபவர்கள் மலாயாவில் இந்தியர்களின் அரசுகள் அழிந்து போனதையும் பெருமையாக நினைக்க வேண்டும். அழிக்கப்பட்ட இந்தியர்கள் அரசுகள் பெரிதாகத் தெரிகிறதா இல்லை இராஜேந்திர சோழனின் படையெடுப்பு பெருமையாகத் தெரிகிறதா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியப் பேரரசுகளில் மிகவும் புகழ் வாய்ந்தது சைலேந்திரா பேரரசு. அந்தப் பேரரசை தரநீந்தரன் எனும் அரசர் ஆட்சி செய்த காலத்தில் ஒரு பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கி.பி. 775 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசு; ஜாவாவில் இருந்த சைலேந்திரா பேரரசு; இந்த இரண்டு பேரரசுகளும் ஒன்றாக இணைந்தன. ஒரே பேரரசாக ஆட்சி செய்தன. ஸ்ரீ விஜய எனும் பெயரில் ஆட்சி செய்யப் பட்டது.

கடாரம் எனும் பூஜாங் பள்ளத்தாக்கைக் கடைசி கடைசியாக ஆட்சி செய்தவர் சங்கராமா விஜயதுங்கவர்மன். ஸ்ரீ விஜய அரசர். இவர்தான் கடாரத்தில் கடைசியாகக் கால் பதித்தவர். சுங்கை மெர்போக் ஆற்றில் கப்பல் ஓட்டியவர்.

சுங்கை மெர்போக் ஆறு என்பதைச் சின்ன ஆறாக நினைத்துவிட வேண்டாம். அந்த ஆறு மலாக்கா நீரிணையில் சேரும் இடத்தில் அதன் அகலம் நான்கு கிலோ மீட்டர்கள். அதை மறந்துவிட வேண்டாம். அவ்வளவு பெரிய ஆறு.

இந்த ஆற்றில் மூன்று முறை படகு பயணம் செய்து இருக்கிறேன். பயணம் செய்யும் போது எல்லாம் கடாரத்து அரசர்களையும் இராஜேந்திர சோழனையும் நினைத்துக் கொள்வேன். அவர்கள் பயணம் செய்த அதே ஆற்றில் நாமும் பயணம் செய்கிறோம் என்று நண்பரிடம் பெருமையாகச் சொல்வேன்.

ஆசிய வரலாற்றில் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் எப்போதுமே நல்ல ஓர் உறவுமுறை இருந்து வந்தது. கி.பி. 9; 10-ஆம் நூற்றாண்டுகளில் நல்லவிதமான பண்டமாற்று வணிகங்கள் நடைபெற்று வந்துள்ளன. இந்து சமயப் பண்பாட்டு மாற்றங்களும் பாரம்பரிய கலாசாரப் பரிவர்த்தனைகளும் நன்றாகவே தடம் பதித்தன.

அப்படியே கொடுக்கல் வாங்கல் வரை போய் நின்றன. கொடுக்கல் வாங்கல் என்றால் பெண் எடுத்துப் பெண் கொடுப்பது. பொன்னும் மணியும் கோடிக் கோடிகளாய்ப் புழங்கியும் இருக்கின்றன.

நல்ல உறவு முறையில் இருந்த சோழர்களுக்கும் ஸ்ரீ விஜய அரசர்களுக்கும் இடையே ஏன் பிரச்சினை வந்தது. அதனால் எப்பேர்ப்பட்ட இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. அதைப் பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இராஜேந்திர சோழனின் படையெடுப்பிற்கு சில பல காரணங்கள் இருக்கின்றன. உண்மையிலேயே அது ஒரு வரலாற்றுக் கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும். தப்பாக நினைக்க வேண்டாம்.

அந்தப் படையெடுப்பை நடத்தியது இராஜாராஜ சோழன் அல்ல. அவருடைய மகன் இராஜேந்திர சோழன். அந்தப் படையெடுப்பிற்கு கட்டளை போட்டது இராஜாராஜ சோழன். படையெடுப்பை நடத்திக் காட்டியது இராஜேந்திர சோழன்.

இராஜாராஜ சோழன் தந்தையார். இராஜேந்திர சோழன் அவருடைய மகனார்.

தென்கிழக்கு ஆசியாவில் சோழப் பரம்பரைக்குப் போட்டியாக இருந்த அத்தனை அரசுகளையும் அடித்துத் துவைத்துக் காயப் போட்டுப் போய் விட்டார்கள். காயங்கள் இன்னும் ஆறவில்லை. அந்தப் படையெடுப்பு ஓராண்டு காலமாக நடந்து இருக்கிறது.

அந்த அவலத்தின் பார்வையில் பல சிற்றரசுகள் சின்னா பின்னமாகிப் போயின. பல பேரரசுகள் நார் நாராய்க் கிழிக்கப் பட்டன. மாட்டிக் கொண்டவை இந்தியர் அரசுகள் மட்டும் அல்ல.

ஜாவானிய போர்னியோ பூர்வீக அரசுகளும் மாட்டிக் கொண்டன. தாய்லாந்திலும் பர்மாவிலும் சில அரசுகள் மாட்டிக் கொண்டன. அதைப் பற்றி பின்னர் விரிவாகச் சொல்கிறேன்.

சைலேந்திரா பரம்பரையின் வழி வந்த ஸ்ரீ விஜய பேரரசு; இழந்து போன தன் முகவரியை இன்று வரையிலும் தேடிக் கொண்டு இருக்கிறது.

ஆசிய வரலாற்றில் அந்தப் படையெடுப்பு ஒரு பெரிய கரும்புள்ளி என்றே சொல்ல வேண்டும். ஏன் என்றால் அந்தப் படையெடுப்பினால் பல இலட்சம் பேர் பலியானார்கள். கடார மண்ணில் மட்டும் பல்லாயிரம் பேர் இறந்து போய் இருக்கிறார்கள்.

சண்டை போட்ட வீரர்களின் உயிர்ப் பலிகள் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் அமைதியாய் ஆனந்தமாய் அப்பாவித் தனமாய் வாழ்ந்த ஆயிரம் ஆயிரம் பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டு இருக்கிறார்களே. அதை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம். சொல்லுங்கள்.

பூஜாங் பள்ளத்தாக்கில் ஸ்ரீ விஜய பேரரசின் அரசர் சங்கராமா விஜயதுங்கவர்மன் நடை பயின்ற இடங்கள் எல்லாம் இப்போது காடு மேடுகளாய்க் காட்சி அளிக்கின்றன. ஓர் ஆயிரம் ஆண்டுகளாகப் புழுதிப் படலங்கள் நிறைந்து நிற்கின்றன.

கடாரத்தின் வரலாற்றில் உச்சம் பார்த்த மலைகளில் வானுயர்ந்து நிற்கும் வானகத்து நெடு மரங்கள் தெரிகின்றன. கதிரொளியைக் காணாமல் கலங்கி நிற்கும் சின்னச் சின்னச் செடி கொடிகள் தெரிகின்றன. அந்தப் பச்சைகளுக்கு அடியில் ஓராயிரத்துக் கடாரத்து மர்மங்கள். புதைந்து கிடப்பதும் தெரியாமல் தெரிகின்றன.

அந்தப் பொன் குவியல்களைப் பார்க்க விடாமல் தடுத்து நிறுத்தும் வரலாற்றுச் சித்தர்களும் இருக்கவே செய்கிறார்கள். பார்த்தே தீருவோம் என்று அடம் பிடிக்கும் இந்தியப் பெருமக்களும் இருக்கவே செய்கிறார்கள். விடுங்கள். நம்ப கதைக்கு வருவோம்.

அந்தக் கடாரத்துக் காட்டு விரிப்புகளில் கறை படிந்த ஒரு வரலாறு நன்றாகவே ஒப்பாரி வைத்து அழுது கொண்டு இருக்கிறது. அந்த அழுகுரலைக் கேட்க மிகச் சரியான தேசியவாதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

அந்த அழுகுரல் கேட்கா விட்டாலும் பரவாயில்லை. இருக்கிற கடாரத்து உண்மைகளைத் திரித்துக் கூறாமல் அழித்துப் போடாமல் இருந்தாலே பெரிய புண்ணியம்.

ஒரு முறை அல்ல. பல முறை ஆய்வுப் பணிகளுக்கு அந்தக் கடாரக் காட்டிற்குள் போய் இருக்கிறேன். அங்கு ஒரு பெரிய நீர்வீழ்ச்சி. காய்ந்து போய் கிடந்தது. உச்சத்தில் நான்கைந்து கரும் பாறைகள். பக்கத்தில் பாழடைந்து போன ஒரு பலகை வீடு.

அதைப் பேய்வீடு என்று சொல்ல மனசு வரவில்லை. அந்த வீட்டைச் சுற்றிலும் மீனாச் செடிப் புதர்கள். அசைந்தாடும் லாலான் புற்கள். காற்று வாடை இல்லாமலேயே ஆடிப் பாடும் செடி கொடிகள்

கற்பாறைகளில் கண் அயர்ந்து கற்பனை செய்து பார்த்தோம். கண்கள் கலங்கின. காட்டு மரங்களின் பட்டைக் கன்னங்களில் நீர்க் கசிவுகள். காட்டுச் செடிகளின் கவின்தகு மலர்களில் இரத்தச் சுவடுகள்.

கடாரம் கொண்ட சோழனினால் எத்தனை எத்தனை ஆயிரம் உயிர்கள் இங்கே பலியாகி இருக்கலாம். காட்டு மரங்களின் சோகக் கதைகளைக் கேட்க எங்களுக்கும் தெம்பு இல்லை.

அந்த உயிர்களின் ஆவிகள் நிச்சயம் இன்னும் அங்கு நடமாடிக் கொண்டு தான் இருக்கும். சமயங்களில் தனிமையில் அமர்ந்து அந்தக் கானகத்துக் காற்றைச் சுவாசிக்கும் போது ஒருவிதமான அச்சம் ஏற்படுகிறது. சத்தியமாகச் சொல்கிறேன்.

ஓர் உண்மை நிகழ்ச்சி. ஒரு நாள் மதிய நேரம். மணி பன்னிரண்டு இருக்கும். நீர்வீழ்ச்சியின் உச்சப் பாறையில் அமர்ந்து இருக்கிறோம். அப்போது யாரோ எங்களுக்குப் பின்னால் வந்து மூச்சு விடுவது போல இருந்தது.

ஒரு மாதிரியான வெப்பக் காற்று. திரும்பிப் பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தடவை அல்ல. இரண்டு மூன்று தடவைகள்.

அது ஒரு மாதிரியான மர்மச் சாயல்களின் மாய உணர்வு. அப்புறம் என்ன. திரும்பிப் பார்க்காமல் கீழே வந்து சேர்ந்தோம். பூஜாங் அரும் பொருள் காட்சியகத்தில் இருந்த அதிகாரிகளிடம் நடந்ததைச் சொன்னோம்.

ஆவிகள் உலவுகின்ற நேரத்தில் நீங்கள் போய் இருக்கிறீர்கள் என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்கள்.

இது எப்படி இருக்கு என்று கேட்கத் தோன்றுகிறது. இன்றைய வரைக்கும் அந்த நிகழ்ச்சி எங்கள் நெஞ்சங்களில் உரசிப் பார்க்கின்றன. சரி.

இராஜேந்திர சோழன் கி.பி. 1025 ஆம் ஆண்டு ஏன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படை எடுத்தான். அதைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

கி.பி.9;10-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவின் ஸ்ரீ விஜயம், சைலேந்திரா பேரரசுகளுக்கும் நல்ல ஒரு சுமுகமான உறவு இருந்து வந்து உள்ளது.

அந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவின் வங்காளத்தில் இருந்த பாலப் பேரரசுவுடன் ஸ்ரீ விஜய பேரரசு அன்பு பாராட்டி வந்தது.

Pala Empire

(Vasily Vasilyev (December 1875). Translated by E. Lyall. “Taranatea’s Account of the Magadha Kings” (PDF). The Indian Antiquary. IV: 365–66.)

சின்ன ஓர் இடைச் செருகல். சைலேந்திரா பேரரசின் வழியாக வந்தவர்கள் தான் சைலேந்திர அரசப் பரம்பரையினர். இவர்கள் தான் ஸ்ரீ விஜய பேரரசைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர்கள்.

சைலேந்திரா அரசப் பரம்பரையினர் இல்லாமல் ஸ்ரீ விஜய பேரரசு என்பதும் இல்லை. மஜபாகித் பேரரசும் இல்லை. ஆக சைலேந்திரா பேரரசு என்றால் அது ஒரு வகையில் ஸ்ரீ விஜய பேரரசைச் சார்ந்ததே.

அடுத்து தரநீந்தரன் என்பவர் சைலேந்திரா பேரரசின் அரசராக இருந்த காலக் கட்டம். அப்போது சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசு, ஜாவாவில் இருந்த சைலேந்திரா பேரரசுடன் இணைந்து கொண்டது.

அந்த இரண்டு பேரரசுகளும் ஒன்றாக இணைந்து ஒரே பேரரசாக உச்சத்தில் கோலோச்சின. கி.பி. 775 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி. சொல்லி இருக்கிறேன். சரி.

பாலப் பேரரசு என்பது இப்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் ஆகிய பகுதிகளில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்கும் 12-ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் இருந்த ஓர் அரசு.

இந்தப் பாலப் பேரரசை நிறுவியவர் கோபாலா என்பவர். கி.பி 750 தொடக்கம் கி.பி 770 வரை ஆட்சியில் இருந்தவர். இவருக்குப் பின்னர் வந்த தர்மபாலா (770-810) தேவபாலா (810-850) ஆகியோர் பாலப் பேரரசை நன்றாகவே வளர்த்துப் பெரிதாக்கினர்.

(Ramaranjan Mukherji; Sachindra Kumar Maity (1967). Corpus of Bengal Inscriptions Bearing on History and Civilization of Bengal. Calcutta: Firma K.L. Mukhopadhyay. p. 11)

இந்தப் பாலப் பேரரசின் காலத்தில் தான் ஸ்ரீ விஜயத்தைச் சேர்ந்த மகாராஜா பாலபுத்ரா

Maharaja Balaputra of Srivijaya

என்பவர் அணுக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். கி.பி. 860-இல் நடந்தது. அதே சமயத்தில் இராஜா ராஜா சோழனுடன் நல்ல சுமுகமான உறவு முறைகளும் இருந்து வந்தன.

இராஜா ராஜனின் சோழ உறவுகளை மேம்படுத்தும் வகையில் கி.பி.1006-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. மேலும் ஒரு மைல்கல். அப்போது சைலேந்திரா பேரரசின் அரசராக மாறன் விஜயதுங்க வர்மன்

Maran Vijaya Tunga Varman

என்பவர் இருந்தார். அப்போது அவர் தமிழக நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரத்தைக் கட்டித் தந்தார். விகாரம் என்றால் புத்த மடாலயம். இன்றும் அந்த விகாரம் இருக்கிறது. நாகப்பட்டினம் போனால் அந்த வரலாற்றுச் சின்னத்தைப் பார்த்து வாருங்கள்.

இராஜேந்திர சோழன் கடாரத்தை எப்படித் தாக்கிச் சிதைத்துப் போட்டான் என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

26/08/18

20/11/2017

16/11/17


23/10/17

22/08/2017


http://ksmuthukrishnan.blogspot.my/
%d bloggers like this: