Mon. Jan 20th, 2020

myinfozon.com

Malaysia Indians Complete Information Database

MALAYSIA HINDHU DHARMA MAMANDRAM – மலேசிய இந்துதர்ம மாமன்றம்

4 min read

24/12/2019 – TUESDAY

ILLA POOJAI COURSE / இல்ல பூஜை பயிற்சி வகுப்பு

https://www.facebook.com/myinfozon/posts/2362618254028833


05/12/2019 – THURSDAY

நெற்றியில் அணிந்த புனிதமான திருநீற்றை கொச்சைப்படுத்தி பேசியதை மாமன்றம் வன்மையாக கண்டிக்கிறது

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2342989175991741


23/11/2019 – SATURDAY

இல்ல பூஜை பயிற்சி வகுப்பு

FOR M0RE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2331426437148015


22/7/2019 – MONDAY

மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 37வது தேசிய பேராளர் மாநாடு கடந்த ஜூன் 29ஆம் தேதி பிரிக்பீல்டில் உள்ள ஸ்ரீ கந்தசாமி ஆலயம் கலாமண்டபத்தில் நடைபெற்றது

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2232167777073882


14/6/19

2/6/19

1/6/19

15/2/19

Dharma Sakthi – Women Empowerment Seminar on 6/4/19 – @Signature Hotel Pudu – Pls help us to share this to all the women !

Posted by Myinfo Zon on Friday, February 15, 2019

10/2/19

Watch & Listen to Dharmathin Kural | தர்மத்தின் குரல் | 08.02.2019 | MaamandramWe Are Looking Forward For…

Posted by Myinfo Zon on Saturday, February 9, 2019

5/2/19

03/02/2019

https://www.facebook.com/arunakiri.nathanii/posts/118086125929306

31/01/019

9/1/19

31/12/18

31 டிசம்பர் 2018

ஊடக வெளியீடு

கோலாலம்பூரில் உள்ள இந்துக்கோயில்களின் நிலை –

மாநகராட்சி மன்றத்தின் முடிவு ஏற்புடைய வகையில் இல்லை!

குறிப்பிட்ட காலத்திற்குள் கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் மாநகராட்சி மன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்  எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் அக்கோயில்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் பிரி மலேசிய டுடே (FMT) வழி  27.12.2018இல் அறிவிப்பை வெளியிட்டுள்ள கூட்டரசு வளாகத் துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ டாக்டர் ஷாருடின் முகமது சாலே அவர்களின் முடிவைக் கண்டு மலேசிய இந்து தர்ம மாமன்றம் அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறது.

பின்வரும் காரணங்களின் அடிப்படையில் அத்தகைய அறிவிப்பும் முடிவும் அவசியமில்லாதது என மலேசிய இந்து தர்ம மாமன்றம் கருதுகிறது:

அ)       பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதியில் மாநிலங்கள் தோறும் இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படும் எனவும் அவ்வாரியத்தின் தலையாய கடமைகளுள் ஒன்றாக இந்து கோயில்களுக்கான வழிகாட்டிச் சட்ட விதிகளையும் கோயில்களுக்கான செல்நெறிகளையும் வகுத்தளிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆ)      கூட்டரசு வளாக அமைச்சின் கீழ் இயங்கும் ரிபி (RIBI- Rumah Ibadat Bukan Islam) எனப்படும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கான சிறப்புச் செயற்குழு இந்துக் கோயில்கள் தொடர்பான சிக்கல்களுக்கு நீண்ட காலமாகத் தீர்வு கண்டு வந்துள்ளது. இச்சிறப்புச் செயற்குழுவிற்கும் அமைச்சரின் இம்முடிவு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை.

இ)       சொந்த நிலங்களிலோ தங்களுக்கு உரிமையில்லாத நிலங்களிலோ அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கோயில்கள், அக்கோயில்களின் பெயரிலோ அல்லது இயக்கங்களின் பெயரிலோ சங்கங்களின் பதிவகத்தில் (ROS) தங்களைப் பதிந்து கொண்டுள்ளன. அவ்வாறு இருக்கையில் மீண்டும் மற்றுமொரு பதிவு எதற்கு என்பதை மாமன்றம் வினவுகிறது.

இஸ்லாமியர் அல்லாதவருக்கு உரிய வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கான வழிகாட்டல்களைப் பிரதமர் துறை வெளியிட்டு உள்ளதாக ஊராட்சி அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் இஹ்சான் பிரி மலேசிய டுடே (FMT) வழி  29.12.2018இல் வெளியிட்டிருந்தார். பின்வரும் அதன் உள்ளடக்கங்களையும் நினைவுகூர்கிறோம்:

அ)       இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கான  வழிபாட்டுத் தலங்கள் அவர்கள் அதிகமாய் வசிக்கும் இடங்களில் அமைக்கப்பட வேண்டும்.

ஆ)      இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கான  வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கான விண்ணப்பங்களை மாநில சமயப் பேரவைக்கு (Majlis Agama Negeri) அனுப்பிவைத்து அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு விதிமுறைகளுள் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றே இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கான வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்குப் போதுமானதாகும். இரண்டாவது விதிமுறையின் அடிப்படையில் பார்ப்போமனால், மாநில சமயப் பேரவை (Majlis Agama Negeri) இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கான வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கான தேவையை எவ்வாறு உணர்ந்து முடிவுக்கு வர இயலும்? எல்லா மலேசிய குடிமக்களின் சமயச் சுதந்திரத்திற்கும் இடமளித்துள்ள கூட்டரசு அரசியல் சாசனத்திற்கு முரணான ஒன்றாக இது விளங்குவதைக் காண முடிகிறது. எதற்காக இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கான வழிபாட்டுத் தலங்களைக் கண்காணிப்பதற்கு இத்தனை அரசு நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன என்ற கேள்வி எழுகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு, பல்வேறு அரசு சாரா இயக்கங்களோடு இணைந்து மலேசிய இந்து தர்ம மாமன்றம் இந்து சமய விவகாரங்கள் தொடர்பாக பிரதமருக்கு ஒரு மனுவை வழங்கியது. அம்மனுவில் இந்நாட்டில் உள்ள இந்து கோயில்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களை விளக்கி அவற்றிற்கான தீர்வுகளையும் முன்வைத்திருந்தோம். ஆனால், அன்றைய அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தவில்லை.

பிரி மலேசிய தூடே (FMT) இணைய இதழில் கடந்த 29.12.2018இல் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிக்கலோடு தொடர்புடைய மற்றுமொரு நிகழ்வின் செய்தியை வெளியிட்டுள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறோம். லெம்பா பந்தாய் நாடளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பாஃஹ்மி பட்சில் அவர்கள் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு உரிமையான நிலத்தில் கட்டப்பட்ட கோயில் ஒன்றை அக்கோயில் நிருவாகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி கேடிஎம்மிற்குச் சொந்தமான நிலத்திற்குக் பிரச்சனைகள் எழாமல் இடமாற்றம் செய்ததாகும்.

இந்தச் சிக்கலைக் களைய மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் வெற்றிடமாகக் காணப்பட்ட ஒன்று என்னவெனில் இந்துக்களைப் பிரதிநிதித்துக் கருத்துக்களை வழங்க எந்த இந்து அமைப்பும் கலந்து கொள்ளாததுதான். இதைப் பற்றி சிந்திக்கும் போது இந்நாட்டு இந்துக்களைப் பிரதிநிதித்து இதுபோன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண ஓர் இந்து அமைப்பு இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. இந்நிலை உண்மையாயின், மலேசிய இந்துக்களைப் பிரதிநிதித்து அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கலைச் சீரிய முறையில் களைவதற்குத் தோள் கொடுக்க மலேசிய இந்து தர்ம மாமன்றம் தயாராக உள்ளது.

பல்வேறு அரசுசார அமைப்புகளின் ஆலோசனையின் பேரில் மலேசிய இந்துதர்ம மாமன்றம் இந்துக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைவதற்கு மட்டுமின்றி இந்து விவகாரங்கள் தொடர்பான முழுமையான திட்ட வரைவாக, மாநிலங்கள் தோறும் இந்து அறப்பணி வாரியங்களும் தேசிய அளவில் மாநில அறப்பணி வாரியங்களை ஒருங்கிணைத்து வழிநடத்த நாடளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அறப்பணி வாரிய அவசியமும் வலியுறுத்தப்படும். இதற்கு இந்திய அமைச்சர்கள் மற்றும் நாடளுமன்ற உறுப்பினர்களின் செயலூகம் அவசியமாகக் கருதப்படுகிறது. இத்திட்ட வரைவு சம்பந்தப்பட்ட யாவரும் ஒன்றுகூடி கலந்துகொண்டு கூடிய விரைவிலேயே மாண்புமிகு பிரதமரிடம் வழங்கப்படவுள்ளது.

மக்களிடயே ஒற்றுமையையும் சமயச் சகிப்புத்தன்மையையும் மேம்படுத்தி இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க இந்துக்கள் சார்ந்த விவகரங்களை முறையாகக் கையாள மலேசிய இந்துதர்ம மாமன்றம் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட தயாராக உள்ளது என மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் திரு. இராதகிருஷ்ணன் அழகுமலை கூறினார்.

இக்கண்,

தேசியத் தலைவர் & தேசியப் பேரவை

மலேசிய இந்துதர்ம மாமன்றம்


14/12/18

Vetti vel muruganekk!Dear Murugan Lovers ,Murugan Saranam & Vanakam ???Penang Arunagirinathar Mandram will be…

Posted by Malaysia Hindu Sangam Penang State Council on Thursday, December 6, 2018

8/12/18

Delegates from the Malaysia Hindudharma Maamandram visiting the Penang Indian Heritage Museum this morning

Posted by Penang Hindu Endowments Board on Saturday, December 8, 2018

5/12/18

29/11/18

02/10/18


https://www.facebook.com/unitehinduyouth/photos/a.492877987554675.1073741829.491119247730549/852782338230903/?type=3&theater

? *DHARMA VEL 2018 – ROAD TOUR* ? *by Malaysia Hindhudharma Maamandram*நேற்று ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில்…

Posted by National Malaysia Hindhudharma Maamandram on Sunday, December 10, 2017

Dharma Welfare 2017 – Blood Donation ?

Posted by Malaysia Hindhu Dharma Mamandram [Penang] on Monday, October 23, 2017

HINDUISM FOR TEENAGERS- 2017!!!! A NATIONAL EVENT NOT TO BE MISSED!!! ??? ? WITH BODHINATHA VEYLANSWAMI OF KAUAI…

Posted by Myinfo Zon on Thursday, September 7, 20174-4-17 8:57:39 PM: ‪+60 12‑688 4270‬: Malaysia Hindhudharma Mamandram Penang Arulnilayam upcoming programs

? Arulnilayam Weekly Meeting Date : 5, 12, 19, 26 April 2017 (Wednesday) Venue : MHDM Penang Arulnilayam Mandram illam at 35C, 3rd Floor, Penang Street, Penang… Time: 8.30 pm till 11.30 pm Organising by MHDM Penang Arulnilayam by Amma Jothimani & N.S.Thanabalan

? Tamil Puthandu Kondattam 2017 Date : 14th April 2017 (Friday) Venue : Shan Children’s Home – Jalan Mount Erskine, 10470 Tanjong Tokong, Penang. Time: 5.30 pm till 9.30 pm Organising by MHDM Penang Arulnilayam by “Dharma Sigamani” V.Nanda Kumar & N.S.Thanabalan

? HBC Tutors Training by Aiya “Dharma Sigamani” L. Sinniah Date : 15th April 2017 (Saturday) Venue : Penang Hindu Endowment Board – Meeting Room, Jalan Macalister, 10450 Georgetown, Penang. Time: 7.30 am till 5.30 pm Organising by MHDM Vishnu Kottam HBC Team by Amma Jothimani PJK, PJM

? Illam Pooja + Athi Shankar Guru Pooja Date: 20th April 2017 Venue: ‘Dharma Bhoosani’ Mrs.G.Sinnammah Rajoo Residence at 45A, MK13, Jalan 4, Air Itam, 11500 Penang. Time: 7:30 pm (Thursday) Organising by MHDM Penang Arulnilayam Magilir by ‘Dharma Bhoosani’ G.Sinnammah Rajoo PJK

? Guru Pooja Date: 22nd April 2017 (Saturday) Venue: MHDM Penang Arulnilayam Mandram illam at 35C, 3rd Floor, Penang Street, Penang Time: 7:30 pm Organising by MHDM Penang Arulnilayam Magilir by Amma Homala

? Youth Seminar & Motivation Course Date : 29th April 2017 (Saturday) Venue : TBA Time: 1.00 pm till 6.00 pm Organising by MHDM Penang Arulnilayam Youth by N.S.Thanabalan & Jack


source : http://www.selliyal.com/archives/140196

ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடுக்கும் மசோதா – இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு!

கோலாலம்பூர் – ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடுக்கும் மசோதாவிற்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மலேசிய இந்துதர்ம மாமன்றம் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு:- “மலேசிய இந்துக்கள் எதிர்நோக்கும் நீண்டகால சர்ச்சைக்குரிய மதமாற்ற உரிமையிழப்பு பிரச்சனை தொடர்கதையாகவே உள்ளது.” “தம்பதிகளுள் கணவரோ மனைவியோ இஸ்லாம் மதத்தைத் தழுவும் பொழுது ஏற்படும் சட்டச் சிக்கல்களுக்கு உட்பட்ட வழக்குகள் பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, யாவரும் அறிந்த ஈப்போவைச் சேர்ந்த திருமதி.இந்திரா காந்தி அவர்களின் வழக்கு இதில்  குறிப்பிடத்தக்கதாகும். பெற்றோரில் தாய் அல்லது தந்தை மதம் மாறுகின்ற வேளையில், அவர்களுள் ஒருவர் மற்றொருவரின் ஒப்புதலின்றி 18 வயதுக்குக் குறைந்த தங்கள் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதால் ஏற்படும் உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.” “இந்துவாகவே வாழ்ந்த ஒருவர் இறந்தவுடன், அவர் முஸ்லீம் என அடையாளம் காட்டப்பட்டு அவருடைய உடல் கையகப்படுத்தப்படும் செயல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.” “இந்து இளைஞர்கள் காதல்வயப்பட்டு முஸ்லீம்களாக மதம் மாறி இஸ்லாமியப் பெண்களைத் திருமணம் செய்துகொள்கின்றனர். பின்னர் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்புவதற்கான முயற்சியில் ஈடுபடும் இவர்கள் நாட்டின் ஷரியா (இஸ்லாமிய) சட்டச்சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.” “ஓர் இந்து இஸ்லாம் மதத்தைத் தழுவும் போது, இந்துவாக உள்ள அவருடைய மற்ற குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்குச் சேர வேண்டிய சொத்துக்களின் மீதான உரிமைகளை இழக்க நேரிடுகிறது. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நாட்டிலுள்ள பிரதான சமய இயக்கங்களோடு இணைந்து மலேசிய இந்துதர்ம மாமன்றம் சட்ட ரீதியாகவும் மற்ற அணுகுமுறைகளின் வழியும் தீர்வுகண்டு வருகின்றது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திட்டத்திலும் மாநில அரசுகளின் இஸ்லாமிய சட்டத்திட்டத்திலும் மாற்றங்களை கொண்டுவருவதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அது பயனளிக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதனால்தான் மாமன்றம் தொடர்ந்து அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று பலமுறை கோரிக்கைகளை முன்வைத்துள்ளது .” “இஸ்லாம் அல்லாதவர்கள் நடப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் புரிந்துக் கொள்ளும் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் மதம் மாறுவதால் ஏற்படும் மணவிலக்கு, குழந்தைகள் பராமரிப்பு தொர்பான பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சட்டதிட்டங்களை பரிந்துரைக்கும் மசோதா தாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த அனைவருக்கும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.” “இதன் மூலம் மதமாற்றத்தால் நம் மலேசிய திருநாட்டில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் தாக்கல் செய்யப்படும் மசோதாவை எந்த ஒரு மாற்றமும் இன்றி இச்சட்டத்திட்ட மாற்றங்கள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற இந்து சமூகத்தின் கோரிக்கையையும் பெரும் எதிர்பார்ப்பையும் மலேசிய இந்துதர்ம மாமன்றம்  முன்வைக்கிறது.” “மேலும் இச்சட்டத்திருத்த மசோதா குழுவில் நியமிக்கப்பட்ட டத்தோ நான்சி சுக்ரி , டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் , டத்தோஸ்ரீ லியாவ் தியோங் லாய், டான்ஸ்ரீ ஜோசப் குருப் ஆகியோருக்கும் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண முற்பட்ட பிரதமருக்கும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் தனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.” “அரசு நீதித்துறையின் தயவினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த சட்ட மசோதா இஸ்லாம் அல்லாதோர் சிவில் சட்டத்திட்டத்தின்படி திருமணம் புரிந்திருந்தால், அவர்கள் இஸ்லாம் முறைப்படி திருமணம் புரிந்துகொள்வதற்கு முன்னர்,  முதலில் தங்களின் மணமுறிவை சிவில் நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்வதை உறுதி செய்யும் திருமணச் சட்டத்திருத்தங்களைக் கொண்டு வருவதை மலேசிய இந்துதர்ம மாமன்றம் பெரிதும் வரவேற்கின்றது. இதன்வழி ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றப்படும் குழந்தைகளுக்கு சிறந்த முறையில் தீர்வுகாண முடியும் என்பது திண்ணம்.” “இந்தச் சட்டத்திட்ட மாற்றம் தற்சமயம் நடப்பிலுள்ள வழக்குகளுக்கும் தீர்வாக அமைவதற்கு அரசும் நீதித்துறையும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று மலேசிய இந்துதர்ம மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.” – இவ்வாறு அப்பத்திரிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இச்சட்டத்திட்ட மாற்றம் பிரதமரின் ஒரே மலேசியா கொள்கையைப் பிரதிபலிப்பதாக அமைவதால், இந்து சமயத்தினர் இம்முயற்சிக்கு நல்லாதரவு வழங்குவார்கள் என உறுதியளிப்பதாகவும் மலேசிய இந்துதர்ம மாமன்ற தேசியத்தலைவர் திரு.அ.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


மலேசிய இந்துதர்ம மாமன்ற 34-வது தேசியப் பேராளர் மாநாடு – சிறப்புச் செய்தி!

-source : http://www.selliyal.com/archives/132433

MHDM2

கோலாலம்பூர் – மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 34-வது ஆண்டு தேசியப் பேராளர் மாநாடு கடந்த 25, 26 ஜூன் 2016-அன்று போர்ட்டிக்சன் நியூப் பயிற்சி மையத்தில் சிறப்பாக நடந்தேறியது. இந்த இரண்டு நாள் மாநாட்டின் முதல் அங்கத்தில் சிவஸ்ரீ இராமலிங்க குருக்களின் பூர்வாங்க பூஜையும், மான்றத்தின் தேசிய உபக்குழுக்கள், கோட்ட மற்றும் அருள்நிலையங்களின் அறிக்கைகள்  ஒளியொலி படைப்பாக தங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் திட்டங்களையும் சமர்ப்பித்தனர். அன்று இரவு மணி 8.30க்கு விருதளிப்பு விழா நடைபெற்றது. மாமன்றத்திற்கும், இந்து தர்மத்திற்கும், சமூகத்திற்கும் ஆற்றிய தன்னலமற்ற திருத்தொண்டினை அங்கீகரித்து ஐவருக்குத் ‘தர்ம மாமணி’ மற்றும் ‘தர்ம பூஷனி’ ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அவ்வகையில், முருகேசு கண்ணன், சரண் பரமசிவம், மனோகரன் முனியாண்டி ஆகிய மூவருக்கும் தர்ம மாமணி விருதும், எஸ்.கனகாம்பாள், செல்வம் மாணிக்கம் ஆகிய இருவருக்கும் தர்ம பூஷனி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாமன்ற தோற்றுனர்கள் எழுவரில் ஒருவரான ஒய்வுப்பெற்ற லெப்டனன் கர்னல் இராஜு அருணாசலத்திற்கு மாமன்றத்தின் உயரிய விருதான ‘தர்ம பூஷனம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், பொது மக்களில் ஒருவர் தியாக உணர்வோடு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட உரிமையை நிலைநிறுத்தி இந்து சமயத்தைப் பேணிக்காத்த சமூக சேவையாளர் இந்திரா காந்திக்கு, 2016ஆம் ஆண்டிற்கான மாமன்ற தேசிய விருதினை வழங்கி பாராட்டி கௌரவித்தது.

MHDM1

மேலும் யூ.பி.எஸ்.ஆர், பிடி3, எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம், மெட்ரிகுலேஷன் ஆகிய தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியைப் பெற்ற மாமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்குச் சான்றிதழும் ஊக்குவிப்புத் தொகையும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இதனிடையே, இம்மாநாட்டில் பேரவைத் தீர்மானங்களும், அரசாங்கத்திற்கு மாமன்றம் சார்பில் அளிக்கப்படவுள்ள கோரிக்கைகள் குறித்தும் அறிவிக்கப்பட்டன. 34வது ஆண்டு தேசியப் பேராளர் மாநாடு ஏகமனதாக ஏற்றுக்கொண்டு மாமன்றத் தேசியத்தலைவர் முன்வைத்த தீர்மானங்களாவன:

MHDM-768x450

1.மாமன்ற உறுப்பினர்கள் யாவரும் நம் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தை மதித்து பேணிக்காத்து பேரரசர்க்கும் அரசாங்கத்திற்கும் விசுவாசமாக இருப்போம் என உறுதியளிக்கிறோம். 2.மலேசிய கல்வி தத்துவ நான்கு கூறுகளுக்கேற்ப (Jasmani; Emosi; Rohani & Intelek) ஒவ்வொரு மாணவருக்கும் ஆன்மீகம் (Rohani) கற்பித்தல் அவசியமாகும். அந்த அடிப்படையில் எவ்வாறு முஸ்லீம் மாணவர்களுக்கு இஸ்லாமியப் பாடம் பள்ளி நேரங்களிலே ஒரு பாடமாகக் கற்பிற்கப்படுகிறதோ அது போன்று, இந்து சமய பாடமும் இந்து மாணவர்களுக்கு நாடளவில் பள்ளி நேரத்திலேயே ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று மலேசிய இந்துதர்ம மாமன்றம், மீண்டும் ஒரு முறை மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைக்கின்றது. இவ்வழி, நாட்டின் சிறந்த குடிமக்களையும் பண்புள்ள சமுதாயத்தையும் நாட்டின் ஒற்றுமையைப் பேணும் இந்துக்களை உருவாக்க முடியும் என மாமன்றம் நம்புகிறது. 3.மலேசிய அரசு அமைச்சரவையில் இந்து சமயத்தினருக்கும் ஒரு தனித்துறை அமைத்து இந்துக்களின் நலன்களை காத்திடவும் தேவைகளை பூர்த்தி செய்திடவும் அரசு ஆவன செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை மீண்டும் இவ்வாண்டு பிரதமருக்கும் அரசுக்கும் முன் வைக்கின்றது. இத்துறையின்வழி அனைத்து இந்து சமய ஆலயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என மாமன்றம் நம்புகின்றது. 4.இந்துக்கள் மதமாற்றத்தால் குறிப்பாக இஸ்லாம் மதத்திற்கு மாறியப்போது அல்லது மாற்றப்படும் போது இந்துக்கள் எதிர்நோக்கும் நெடுங்கால அவலங்களிலிருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடவும் தொடர்ந்து அரசுக்கு இந்துக்களின் ஆதரவு தொடர்ந்திடவும் அரசியலமைப்பு சட்ட திட்டத்தில் மாற்றங்களை உடன் கொண்டு வேண்டும் எனும் கோரிக்கையை பிரதமருக்கும் அரசுக்கும் மலேசிய இந்து தர்ம மாமன்றம் முன் வைக்கின்றது. 5.இந்து மதம் மட்டுமல்லாமல், இந்நாட்டில் உள்ள அனைத்து இன, மதத்தைச் சார்ந்த சமயம், மொழி, கலை, கலாச்சாரம் தொடர்பான விசயங்களைக் குறித்து இழிவுப்படுத்தி, அவமதித்து மலேசிய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கும் செயலை மேற்கொள்ளும் எந்த இன, மதத்தைச் சார்ந்த நபர்களின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கும்படி மாமன்றம் கேட்டுக் கொள்கிறது. நீதிமன்றம் அவர்களுக்குத் தண்டனையாக துப்புரவு பணி, முதியோர் இல்லத்தில் சேவை முதலான மனம் வருந்தி திருந்தும் தண்டனையாக வழங்குதல் வேண்டுமென மாமன்றம் கேட்டுக்கொள்கிறது. அரசாங்கத்திற்கு மாமன்றத்தின் முறையீடுகள்

mhdm3

1.இவ்வாண்டு மீண்டும் மாதாந்திர அடிப்படையில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கோவில்களில் பூஜை மேற்கொண்டு சமய வகுப்புகளும் நடத்தி வரும் மலேசிய அர்ச்சகர்களுக்கு/குருமார்களுக்கு மாதந்தோறும் சன்மானம் வழங்குதலை அரசுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. 2.இந்து சமய வகுப்புகள் நடத்தும் போதனையாசிரியர்களுக்கு மாதந்தோறும் சன்மானம் (அரசாங்கம் சார்பற்ற அமைப்புகளால் நியமனம் செய்யப்பட்டவர்கள்) வழங்க அரசுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. 3.கோவில்களிலும் இந்து இயக்கங்களிலும் பணிபுரிந்து வரும் அனைத்து துணைத் திருமணப் பதிவதிகாரிகளுக்கும் மாதந்தோறும் சன்மானம் அரசு வழங்க வேண்டி பரிந்துரைக்கப்படுகிறது. 4.இந்து கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வழிபடும் வசதிகளை கொண்டிருத்தலை வலியுறுத்தி வேண்டி ஆலய நிர்வாகங்களையும் ஆலயக் கட்டுமானங்களை ஏற்று கட்டிட தகுதிச் சான்று (CF) வழங்கும் மாநகராட்சி மன்றங்களையும் / நகராண்மை கழகங்ளையும் அமலாக்கம் செய்ய வேண்டிக் மாமன்றம் கேட்டுக்கொள்கிறது. 5.மலிவான மதுபானங்களைப் பரவலாக விற்பதையும், விற்பதற்கான அனுமதியினை வழங்குதலையும் பொது இடங்களில் மதுபானம் அருந்தும் செயலையும் மாமன்றம் கண்டித்துத் தக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி செயலவை உறுப்பினர்களையும் அதன் தொடர்புடைய அதிகாரிகளையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 6.குண்டர்கும்பல், போதைப்பொருள் பழக்கங்களைப் பள்ளிகளிலும் உயர்கல்விக் கூடங்களிலும் பரப்பும் செயலைக் கண்டித்து அரசு மேலான நடவடிக்கைகளை எடுத்திடல் வேண்டும் என மாமன்றம் கேட்டுக்க் கொள்கிறது. மலேசிய இந்துக்களிடம் வேண்டுகோள்

mhdm4.jpeg

1.நாடுதழுவிய அளவில் 523 தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்துமத அடிப்படை சமயக் கல்வியைக் கற்பிக்கும் வகையில் இலவச இந்துதர்ம பாடப் புத்தகங்களும் நடவடிக்கை புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்துசமயக் கல்வித் திட்டத்தின் மூலம் நன்னெறிகளை மேம்படுத்துதல் வேண்டும். கூட்டு முயற்சியாக இச்சமயக் கல்வித் திட்டம் அமைவதற்குப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியக்குழு ஆகியோர் இணைந்து செயல்பட பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 2.நமது மாமன்றம் நடத்தும் தேசிய அளவிலான இந்துதர்ம அடிப்படை பயிற்சி வகுப்பில் பொதுமக்கள், முக்கியமாகப் பெற்றோர்கள் அவர்தம் குழந்தைகளை இப்பயிற்சியில் கலந்துகொள்ள ஊக்குவித்து ஆதரவு நல்குதல் வேண்டும் என மாமன்றம் விரும்புகின்றது. 3.மாமன்றம் நடத்தும் இந்துதர்ம இளைஞர் பயிற்சி முகாமில் நம் இந்து இளைஞர்கள் பங்குபெற்று பயனடையும் வகையிலும் இளைஞர்களிடையே நிலவும் சமூக சீர்கேடுகளை ஒழித்திடவும், இளைஞர்களிடையே நற்குணங்களை மேம்படுத்துவதற்கும் பொது மக்கள், சமூக நலன் விரும்பிகள், இந்து இயக்கங்கள் இம்முகாமிற்கு இளைஞர்கள் பங்குபெற ஊக்குவித்தலை மாமன்றம் வரவேற்கிறது. பினாங்கு அருள்நிலையம் அனுப்பிய பரிந்துரை திருமணம் புரிந்துகொள்ளவிருக்கும் இந்து தம்பதியினர் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்வதற்கு முன்னர் கட்டாயமாக இந்து சமய திருமணப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளுதல் வேண்டுமென பினாங்கு அருள்நிலையம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு இந்துக்களிடையிலான மணமுறிவுகளை தவிர்க்கலாம். இவ்வாறான தீர்மானங்கள் இம்மாநாட்டில் அறிவிக்கப்பட்டன. மேலும், மாமன்றத்தில் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்த தாமான் துன் சம்பந்தன் (2015) மற்றும் பினாங்கு (2016) அருள்நிலையங்களுக்கு ஞானாசிரியர் விருது வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 3.30க்குச் சம்பூர்த்திப் பூஜையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றதாக கௌரவப் பொதுச் செயலாளர் ரிஷிகுமார் வடிவேலு தெரிவித்தார்.


Please log in to www.facebook.com/mamandram to view live interview with Madam Indra Gandhi and her struggles for survive as a Hindu!!!!   Please share. 25/06/16 – 10.30pm  LIVE ON FACEBOOK
WhatsApp-Image-20160626-16

MHDM upcoming Nat.HBC Program (JB) on Thai Mozhi daily Page 4 ( 03.11.2015 Tuesday )

XXXXXXXXXXXXXXXXXXXXXX

11665720_1013207452030865_7610105876696646309_n

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

International Yoga Day

General Audience 06.30am10.00am Sri Subramaniam Swamy Temple Rishi 0122016115 rishi.mhdm@gmail.comhttp://www.maamandram.com free –

Malaysia HinduDharma Maamandram MHDM is organizing a mass yoga congregation on 21st June 2015 in conjunction with International Yoga Day. Venue Sri Subramaniam Swamy Temple Batu CavesTime 6.30am 10.00am Breakfast Tshirt and participation certificate will be provided. We expect 1008 participants.Register via our website.www.maamandram.org

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Dear all , Vanakam

We are looking for Project officers to handle our growing demand for more activities and reaching out activities nationwide.

The interested individuals ;-
Hindu minded
Speaks and writes Tamil ,English and bahasa Malaysia
good communication skills
willing to travel
interest (passion) in social / community service

vacancy available for 1 male / 1 female
1 year contract
Immediate intake
based in our Hq office in Little India , brickfields , Kuala Lumpur

Rishi Kumar Vadivelu
Secretary General

5a73da_68d7b9b8e58c4c6e97f1fe69a7b89741.jpg_srz_p_980_257_75_22_0.50_1.20_0.00_jpg_srz

MALAYSIA HINDHU DHARMA MAMANDRAM
012-2016115
Malaysia HindhuDharma Maamandram
No.61-2A,2nd Floor,Pearl Court, Jalan Thamby Abdullah,Brickfileds,50470 Kuala Lumpur
03 2260 6016 www.maamandram.org
rishi.mhdm@gmail.com

http://www.maamandram.com
http://www.facebook.com/Maamandram
http://www.youtube.com/user/Maamandram
http://goo.gl/maps/u0Hxd – Click For Map

Malaysia Hindhu Dharma Mamandram [Penang]-

https://www.facebook.com/MalaysiaHindhudharmaMamandramPenang/timeline

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.