Gabungan Persatuan Persatuan Seni India Malaysia (GASIM)

9/6/19

17/5/19

15/3/19

9/3/19

25/12/18

21/12/18

17/11/18

03/04/18


https://www.facebook.com/myinfozon/posts/1874754199481910 on December 24, 2017காசிம் எனப்படும் மலேசிய இந்தியக் கலை இயக்கங்களின் பேரவை உள்ளூர் கலைஞர்கள் எதிர்காலத்திற்கு அடித்தளம்காசிம் எனப்படும் மலேசிய இந்தியக் கலை இயக்கங்களின் பேரவை உள்ளூர் கலைஞர்கள் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும்!தலைவர் விஜே எமர்ஜென்சி நம்பிக்கைசெய்தியாளர் : குணாளன் மணியம் கோலாலம்பூர், டிச.25- காசிம் எனப்படும் மலேசிய இந்தியக் கலை இயக்கங்களின் பேரவை

உள்ளூர் கலைஞர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் என்று அதன் தேசியத் தலைவர்

விஜே எமர்ஜென்சி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கலைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரு தளம் இல்லாமல் தவித்து வந்தனர்.

இனிமேல் அவர்களுக்கு இந்த நிலை ஏற்படாது.

கலைஞர்கள் எதிர்நோக்கும் குறிப்பாக காசிமில் உறுப்பியம் பெற்றுள்ள அனைத்து கலைஞர்களின் பிரச்சினைகளுக்கும்

தீர்வு காணும் ஒரு தளமாக காசிம் இருக்கும் என்று தலைநகர் சோமா அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விஜே கூறினார். மலேசியாவில் கலைஞர்கள் தொடர்புடைய பல சங்கங்கள்,

அமைப்புகள் இருந்த போதிலும் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட முடியாமல் இருந்தது. கலைஞர்கள் எந்த சங்கத்தில் இணைவது என்ற குழப்பத்திலும் இருந்தனர்.

நாட்டில் பிரிந்து கிடக்கும் கலைஞர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அவர்களின் எதிர்காலத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 23 இயக்கங்கள் ஒருங்கிணைப்பில்

அமைக்கப்பட்டதுதான் இந்த காசிம் பேரவை. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி இதற்காக அமைப்பு முறைகள் ஆராயப்பட்டன.

நாட்டின் மூத்த கலைஞர்களான விஜயசிங்கம், சுகன்பஞ்சாசரம், திவாகர் சுப்பையா ஆகியோரை ஆலோசகர்களாகக் கொண்டு காசிம் அமைக்கப்பட்டுள்ளதாக விஜே சொன்னார்.

காசிம் முழுக்க முழுக்க கலைஞர்களுக்கான பேரவை. இது கலைஞர்கள் தொடர்புடைய எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உதவும்.

மலேசியாவில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் மலேசியக் கலைஞர்கள் கால்பதிக்க காசிம் உதவும். இதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம்,

தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரு சங்கங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் விஜே குறிப்பிட்டார்.

மலேசியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் திரையரங்குகளில் நீண்ட காலம் திரையேரச் செய்வது, கலைஞர்களுக்காக கூட்டுறவுக் கழகம் அமைப்பது,

கலைஞர்களுக்காக காப்புறுதி பாதுகாப்பு ஏற்படுத்தித் தருவது, கலைஞர்கள் கலைத் தயாரிப்புகளுக்கு ஆதரவு தருவது என்று கலைஞர்களுக்கான பல நடவடிக்கைகளை

மேற்கொள்ள மலேசிய இந்தியக் கலை இயக்கங்களின் பேரவை திட்டமிட்டுள்ளதாக விஜே எமர்ஜென்சி தெரிவித்தார்.

காசிம் துணைத் தலைவராக எம்.சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பேரவையில் உறுப்பியம் பெற விரும்புகிறவர்கள் 23 சங்கங்களில்

ஏதாவது ஒரு சங்கத்தில் உறுப்பியம் பெற்று காசிம் பேரவையில் இணையலாம்.

தொடர்புக்கு யுவாஜி-010-247 5137, விஜே-012-388 0587 .

Post Author: myinfozon