MALAYSIAN INDIAN EDUCATION & ISSUES -3 (5/1/2019-till now)

11/6/19 9/6/19 2/6/19 20/5/19 4/5/19 3/5/19 25/4/19 24/4/19 23/4/19 22/4/19 21/4/19 20/4/19 19/4/19 18/4/19 17/4/19 16/4/19 மெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது! இந்தியர்களின் தலையெழுத்து? Aegan ஏப்ரல் 16, 20193370 ஆட்சி மாறினால் மலேசிய இந்தியர்களின் வாழ்வாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பிய இச்சமுதாயத்திற்கு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. உயர் கல்வி கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு போதுமான இடம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து […]

DLP ISSUE

22/4/19

15/4/19

03/12/18

27/11/18

26/11/18

10/01/2018

04/01/2018

03/01/2018

04/12/2017


28/11/2017

Tamil activist walks 350kmin protest against DLP – Nation | The Star Online

A TAMIL activist in Johor is walking 350km from Johor Baru to Putrajaya to protest against the implementation of the Dual Language Programme (DLP) in Tamil schools, Tamil Nesan reported. S. Thiagu, a 27-year-old pharmacologist, said he was aware that one man walking may not bring about the desired change.

https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FMotherTongueEducation%2Fvideos%2F1705765686103379%2F&show_text=0&width=560

20/9/2017


A Special Meeting and Press Conference – No to Dual Language Program(DLP)in Tamil Schools.
DLP – national forum on behalf of Mother Tongue Education

greetings sir/mdm

attached below invitation for national forum on behalf of Mother Tongue Education.

Please confrim us your attendance via email @ southernbrothers.club@gmail or call us at 016 48 9218, 013 632 0587 & 012 434 1474. Together we uplift our Mother Tongue Education in Malaysia. tqvm


26/6/17, முற்பகல் 10:49:16: +60 13‑439 2016:

கள்ளத்தனமாக இருமொழித் திட்டத்தை திணித்த, தலைமையாசிரியர் தலை உருளுமா?

Jun 25th, 2017 @ 07:40 pm › Rajan

கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் காயீர் முகமட் யுசொப் அனைத்து மாநில கல்வி இயக்குனர்களுக்கும் இருமொழி கல்வித் திட்டம் (DLP) குறித்து 27.10.2016 தேதியிடப்பட்ட கடிதத்தின் வழியாக அறிவிப்பு செய்திருந்தார். அந்த அறிவிப்போடு இந்தத் திட்டத்தில் இடம் பெற அரசு அனுமதி பெற்றுள்ள சுமார் 486 தொடக்கப்பள்ளிகளின் பட்டியலையும் இணைத்திருந்தார். அந்தப் பட்டியலில் மொத்தம் 47 தமிழ்ப்பள்ளிகள் இடம் பெற்று இருந்தன.

அதாவது, மொத்தமே 47 தமிழ்ப்பள்ளிகளுக்குத்தான் இருமொழித் திட்டம் அமல்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டது. 2015-இல் எந்தத் தமிழ்ப்பள்ளியுமே அரசு நிர்ணயித்துள்ள அடைவுநிலையில் இல்லாதால் இத்திட்டத்தில் எந்தப் பள்ளியும் இடம் பெறவில்லை.

இருப்பினும், 2016-இல் திடீரென 47 பள்ளிகளுக்கு அடைவு நிலை இல்லாத சூழலில் இந்தத் திட்டம் அமுலாக்கப்பட்டது. இதைக் கடுமையாக ஆட்சேபித்து மே-19 இயக்கத்தினர், பல சமூக இயக்கங்களின் ஆதரவோடு, கடந்த மாதம் ஒரு கண்டனப் போராட்டத்தை புத்ராஜெயாவில்  நடத்தி  கல்வி அமைச்சர் இந்தத் திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளில் இருந்து உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

நிலமை இவ்வாறு இருக்கையில், அதிர்ச்சியான தகவல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது  என்கிறார் மே-19 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஆர். பாலமுரளி. அதாவது 27.10.2016 பட்டியலில் இடம் பெறாத ஒரு தமிழ்ப்பள்ளியில் பெற்றோர்களின் எதிர்புக்கு மத்தியில் DLP அமல் படுத்தப்பட்டு வருகிறது என்கிறார்.

இது பண்டார் உத்தாமாமாவில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்கிறார்.

இது சம்பந்தமாக பள்ளியில் தங்கள் குழந்தைகளை முதலாம் ஆண்டில் சேர்த்துள்ள பெற்றோர்கள் புகார் கொடுத்தும் புகார்தாரர்களை அழைத்து விசாரிக்கவோ பதில் கொடுக்கவோ கல்வி அமைச்சும், கமலநாதனின் அலுவலகமும் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக அவ்வாட்டாரத்தை சார்ந்த தமிழ் ஆர்வலர் கணியமுதன் கருத்துரைத்தார்.

இது சார்பாக கல்வி அமைச்சுக்கு புகார் கொடுக்கப்படும். அதோடு சம்பந்தப்பட்ட தலைமையாசியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தப் போவதாக  அவர்  மேலும் கூறினார்.

தமிழ்ப்பள்ளியின் கட்டமைப்பு மீது இந்த இருமொழித் திட்டம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இத்திட்டம் தமிழ்ப்பள்ளிக்கு உகந்ததல்ல என்ற நிலையில், ஒரு தலைமையாசிரியர்   பொறுப்பற்ற முறையில் இவ்வாறு செய்திருந்தால் அதை அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்கிறார் இன்னொரு தமிழ் ஆர்வலர் சிவகுமார்.

All content Copyright SEMPARUTHI.COM

இரட்டை மொழித் திட்டம் நடைமுறை சவால்களை எதிர் கொள்ளுமா?

திங்கள் 13 பிப்ரவரி 2017 14:22:44

img

மழைவிட்டும் தூவானம் விடவில்லை – 2017- ஆம் ஆண்டு முதல் 47 தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் இரட்டை மொழிகல்வி திட்டத்தை பொறுத்தவரை இதுதான் இன்றையச் சூழல் என்று ஏவுகணை கருதுகின்றது. ஏவுகணையைப் பொறுத்தமட்டில், தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை இவ்வாண்டு முதலாம் மற்றும் நான்காம் ஆண்டுகள் தொடங்கி ஆங்கில மொழியில், தமிழ்மொழியில் போதிக்கும் நடைமுறை சாதகமான நன்மைகளையே ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தியே வந்துள்ளது. டிஎல்பியின் (Dual Language Programme) அமலாக்கத்தினைத் தமிழ்ப்பள்ளிகளில் அமல் படுத்தக் கூடாது என்பதைக் கூறுவதற்குத் தகுதியானவர்கள் பெற்றோர்களே என்பதன் அடிப்படையில் அதனை கல்வி தொடர்பு அறவே இல்லாத அரசு சாரா இயக்கங்கள் கோரிக்கை விடுப்பது அநாகரிகமான செயலாக ஏவுகணை கருதுகின்றது. ஏற்கெனவே நாட்டில் உள்ள 524 தமிழ்ப்பள்ளிகளும் ஏறக்குறைய 50% மாணவர்களை தேசியப் பள்ளிகளுக்கும் சீனத் தொடக்கப்பள்ளிகளுக்கும் தாரை வார்த்துள்ள நிலையில் இரட்டை மொழித் திட்டத்தினை தமிழ்ப்பள்ளிகளில் அமலாக்கம் செய்வதைத் தடுத்தால் மேலும் நூற்றுக்கணக்கான தமிழ்ப்பள்ளிகளை இழக்க நேரிடுவதோடு மட்டுமல்லாமல் தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிலைப்பள்ளிகளின் கல்வியை முடமாக்கும் நடவடிக்கையாகவும் அமைந்து விடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளதை உணர்ச்சிகரமாக மட்டுமே பேசி வரும் அடையாளம் இல்லாத அரசு சாரா இயக்கங்களால் உணர முடியாது என்பதை ஏவுகணையால் உறுதியாகக் கூற முடியும். இடைநிலைப்பள்ளிகளின் கல்வி அமைப்பு மலேசியக் கல்வியமைச்சின் இடைநிலைப்பள்ளிகளுக்கான அமைப்பு மலேசிய இந்திய மாணவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை என்பதைப் பற்றி எந்த ஒரு அரசு சாரா இயக்கமும் வாய் திறக்காத நிலையில் இந்திய மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்கி இருப்பதையாவது உணர்வார்களா? என ஏவுகணை கேட்க விரும்புகின்றது. மலேசியக் கல்வி அமைச்சின் (Kementerian Pelajaran Malaysia -KPM) இடைநிலைப்பள்ளிகளுக்கான கல்வி முறை பின்வருமாறு அமைந்திருக்கின்றது. ஆறு ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் படித்த இந்திய மாணவர்கள் படிவம் 1-ற்குச் செல்லும் போது சுமார் 95% ட்டு மாணவர்கள் தினப்பள்ளிகளாக செயல்பட்டு வரும் இடைநிலைப்பள்ளிகளுக்கே (SMK Harian) செல்லும் வாய்ப்பினை மட்டுமே பெற்றுள்ளதை அனைவரும் அறிவோம்! * இளநிலை அறிவியல் கல்லூரி (MRSM) * முழு நேர தங்கும் விடுதிப் பள்ளிகள் (Sekolah Berasrama Penuh-SBP) * முழு நேர தங்கும் விடுதிச் சமயப் பள்ளிகள் (SMA Berasrama) * அறிவியல் இடைநிலைப்பள்ளிகள் (Sekolah Menengah Sains) * தொழில் திறன் நுட்பக் கல்லூரிகள் (Kolej Vokasional/ Teknik) * தனியார் சீன இடைநிலைப்பள்ளிகள் (SMJK) * இடைநிலைப்பள்ளிகள் (SM Kebangsaan Harian) மேற்காணப்படும் இடைநிலைப்பள்ளிகள் இன ரீதியிலான அடிப்படையிலேயே செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் மலாய் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கேற்ப இடைநிலைப்பள்ளிகள் வழங்கப்படும் நிலையில் மூன்றாம், நாலாந்தர மாணவர்களே தேசிய வகை இடை நிலைப்பள்ளிகளில் பயில்வதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கிடையே ஆரம்பப்பள்ளிகளில் பயின்று வரும் சீனப்பள்ளி மாணவர்களே அரசாங்க உதவி பெற்று வரும் சீனப் இடைநிலைப்பள்ளிகளிலும், தனியார் இடைநிலைப்பள்ளிகளிலும் பதிந்து கொள்ளும் நிலையில் இரண்டாந்தர மாணவர்களும் கல்வியில் பின் தங்கியவர்களும் மட்டுமே தேசிய வகை இடைநிலைப்பள்ளிகளில் பயில வரும் நிலையில் தமிழ்ப்பள்ளி, தேசியப் பள்ளிகளில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் வேறு வாய்ப்புகள் இல்லாமல் தேசிய வகை இடைநிலைப்பள்ளிகளில் மட்டுமே படிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். ஏற்கெனவே ஆரம்பப் பள்ளிகளில் பயின்ற மலாய் மாணவர்கள் உயரிய வசதிகளையும், வாய்ப்புகளையும் கொண்ட இடைநிலைப்பள்ளிகளுக்குச் செல்லும் சூழலில் தேசிய வகை இடைநிலைப்பள்ளிகள் என தினப்பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகளை ஏற்படுத்தி இன ரீதியிலான கல்வி முறைக்கான வாய்ப்பினைப் பற்றி யாருமே குரல் எழுப்பியதாக ஏவுகணை அறியவில்லை. தேசிய வகை இடைநிலைப்பள்ளிகளில் (SMK) பள்ளிகளில் பணியாற்றும் முதல்வர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிவம் ஒன்றிற்கான வகுப்புகள்: * சிறப்பு பிரத்தியேக வகுப்புகள் (Kelas Rancangan Khas-KRK) * சிறப்பு சமய பிரத்தியேக வகுப்புகள் (Kelas Rancangan Agama- KRA) * சிறப்பு தொழில் திறன் வகுப்புகள் (Kelas Pengenalan Asas Vokasional -PAV) என்பதாக இன ரீதியாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும் வகுப்புகள் இரட்டை மொழித் திட்டத்தின் வழி மேலும் ஒரு வகுப்பும் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி பாடத்திட்டத்தினை அமல்படுத்தாமல் விடுபட்டால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நான்காவது அல்லது ஐந்தாவது வகுப்புகளில் மட்டுமே தஞ்சமடைய வேண்டியிருக்கும் என்பதை யாராவது சிந்தித்தார்களா? ஓரங்கட்டப்பட்ட இந்திய மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிப்பவர்களில் பெரும்பாலோர் கல்வி துறையில் இல்லாதவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் ஓரங்கட்டப்படும் திட்டங்களைப் பற்றியும் இந்திய மாணவர்கள் தினப்பள்ளிகளான இடைநிலைப்பள்ளி களிலேயே நம்பியிருக்கும் நிலையில் டிஎல்பி திட்டத்தில் இடம் பெறாவிட்டால் * மாரா அறிவியல் இளநிலைக் கல்லூரி * முழு நேர தங்கும் விடுதிப்பள்ளிகள் * அறிவியல் இடைநிலைப்பள்ளிகள் * தொழில் திறன் கல்லூரிகள் போன்றவற்றில் கல்வி பயிலும் வாய்ப்புகளை முழுமையாக இழந்து விடும் அபாயம் இருப்பதை அறிவுடையவர்களாகச் சிந்திக்க வேண்டும் என ஏவுகணை கேட்டுக் கொள்கின்றது. எஸ்பிஎம் தேர்விற்குப் பிந்திய மெட்ரிகுலேஷன் கல்லூரி வாய்ப்புகள் தற்போது 1,500 இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் டிஎல்பி கல்வி முறையை உணர்ச்சியின் பெயரால் நழுவ விட்டால் ஒரு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக் கூட மெட்ரிகுலேஷன் கல்லூரி வாய்ப்புகள் கிடைக்காது என்பதை யாராவது மறுக்க முடியுமா? ஆக மொத்தத்தில் தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி எனப்படும் இரட்டைமொழித் திட்டத்தினை அரசு சாரா இயக்கங்களின் விவேகமற்ற நடவடிக்கைகளால் தமிழ்ப்பள்ளிகள் இழக்க நேரிடுமானால் தமிழ்ப்பள்ளி மாணவர் களின் எதிர்காலத்திற்கு எவ்வகையான உத்தரவாதத்தினை வழங்கப்போகின்றார்கள் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என ஏவுகணை கோரிக்கை வைக்கின்றது. நாளை மேலும் தகவல்களோடு ஏவுகணை சந்திக்கும். * தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முழுமையாக ஓரங்கட்டப்படுவார்கள் * இடைநிலைப்பள்ளிகளில் பிரித்தாளும் கொள்கையில் மிகப் பெரிய அபாயம் * சிறப்புப் பள்ளிகளுக்கான வாய்ப்புகள் பறிபோகும் சூழல் * மெட்ரிகுலேசன் கல்லூரி வாய்ப்புகள் கானல் நீராகப்போகும்.


The forgotten facts by Public -DLPதமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி திட்டத்தை இரத்து செய்ய கோரிக்கை!

DLP Pc

இருமொழித் திட்டத்தை தவறாக கையாண்ட தலைமையாசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மீது கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த திட்டத்தை கல்வி அமைச்சி தமிழ்ப்பள்ளிகல் நடத்துவதை இரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இது சார்பாக இன்றுக் கலை செந்துல் உணவகத்தின் செய்தியாளர் அரங்கில் நடத்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்ப்ட்டது. முப்பது சமூக இயக்கங்களை பிரதிநிதித்த குழுவினர் இது சார்பாக விடுத்த பத்திரிக்கை செய்தி வருமாறு. மலேசியாவில் உள்ள 524 தமிழ்ப்பள்ளிகளில் நாற்பத்தேழு  (47)  தமிழ்ப்பள்ளிகள் டிஎல்பி எனப்படும் இருமொழித் திட்டத்தை அமலாக்கம் செய்ய அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இப்பள்ளிகள் அனைத்தும் முறையான வழியில் இந்த அனுமதியைப்  பெற்றனவா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தலைமையாசிரியரின் ஆர்வத்தாலும் அல்லது பிடிஎஸ்டி(PTST) என்ற தமிழ்ப்பள்ளி திட்ட வரைவு  அளித்த அழுத்தத்தாலும் இந்தப் பள்ளிகள் கல்வி அமைச்சு வரையறுத்துள்ள கோட்பாடுகளுக்கு முரணான வகையில் இதில் பங்கெடுக்க விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தேசியப்பள்ளிகளில் இந்த இருமொழித் திட்ட அமலாக்கத்திற்கு சில அடிப்படை அடைவுகளை கல்வி அமைச்சு நிர்ணயம் செய்துள்ளது. அவற்றை பூர்த்தி செய்யும் பள்ளிகள் மட்டுமே இதில் பங்குகொள்ள அனுமதிக்கப்படும். ஆனால், இந்த அடிப்படை அடைவுநிலைகளை எட்டாத நிலையில் உள்ள 47 தமிழ்ப்பள்ளிகள் இதில் பங்கு பெற்றுள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு  கல்வி அமைச்சு எந்த அடிப்படையில் இந்த அனுமதியை வழங்கியது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

BANNER PC2.

அதோடு, இந்தத் திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு உகந்தது அல்ல. தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 90  விழுக்காட்டிற்கு  அதிகமானோர் வீட்டில் தமிழ்மொழியைப்  பயன்படுத்துபவர்கள்.  இந்த திட்டத்தால் இந்த மாணவர்களின் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களின் திறன்கள் பாதிப்படையும். அப்படிப்பட்ட நிலை உருவாகும் போது அதற்கான பொறுப்பை யார் ஏற்பது என்ற வினாவும் எழுகிறது. பெற்றோர்களின் அனுமதி உள்ளதாக பள்ளிகள் கூறினாலும், தலைமையாசிரியர்தான் இதற்கான முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். காரணம், தலைமையாசிரியருக்குத்தான் அந்த அடைவுநிலைகள், மாணவர்களின் தரம், ஆங்கிலமொழியில் அறிவியல் கணிதம் போன்ற பாடங்களை ஆங்கிலம் தெரியாத குழந்தைகளுக்குக்  கற்பித்தலுக்கான ஆற்றல் பள்ளிக்கு உள்ளதா என்பது போன்ற தகவல் தெரியும்.

DLP collage

வெறுமனே ஆங்கிலமொழி மோகத்தில் ஆர்வம் கொண்டு குழந்தைகளின் மொழியாற்றலுக்கு அப்பாற்பட்ட வகையில், புரிந்துணர்வு தேவைப்படும் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை, புரியாத ஆங்கிலமொழி வழி போதிக்க முற்படுவது குழந்தைகளின் திறன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே அமையும். கல்வி அமைச்சு நிர்ணயத்துள்ள அடைவுநிலைகள் வருமாறு: முதலாவதாக, அந்தப் பள்ளியில் கற்றல் கற்பித்தலுக்கு உகந்த பாடப் புத்தகங்கள், துணை நூல்கள், மேற்கோள் நூல்கள் போன்ற வளங்கள் போதுமானதாக இருக்க வேண்டும். இவை மிகவும் முக்கியமானவை. தமிழ்ப்பள்ளிகளில் இந்த அளவுக்கான வசதிகள் கிடையாது. மேலும், போதுமான அளவு எவ்வளவு  என்பதும் தெரியாது. இரண்டாவதாக, தலைமையாசிரியர்/ஆசிரியர் இந்த திட்ட அமலாக்கத்திற்கு தயாராக இருக்க வேண்டும். குறுகிய மற்றும் நீண்ட கால அளவிற்குப் போதுமான ஆசிரியர் தேவையை உறுதி செய்ய தலைமையாசிரியர் திட்டமிட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் போதிக்கும் திறன் மிகுந்த ஆசிரியர்கள் வேண்டும். PPSMI இரத்து செய்ததற்கான காரணங்களில் ஒன்று இவ்வகையான ஆசிரியர்கள் இல்லாமையாகும். தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தமட்டில் இவ்வகையான ஆசிரியர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், தமிழில் அறிவியல் மற்றும் கணிதம் போதிக்க தமிழ் ஆசிரியர்கள் உண்டு. மூன்றாவதாக, பெற்றோர்கள் எழுத்துமூலமாக இந்தத் திட்டத்தில் பங்கெடுப்பதை உறுதி செய்ய வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதற்கு ஒப்புதலும் ஆதரவும் நல்க வேண்டும்.

tamil_school

உண்மையான விளக்கம் பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. உதாரணமாக, அறிவியல் பாடத்தை கேள்வி அறிவின் வழிதான் மேம்படுத்த இயலும். ஏன்? எப்படி? எதனால்? போன்ற வினாக்களை குழந்தைகள் கேட்க வேண்டுமானால் அவர்களுக்கு முதலில் என்ன பயில்கிறோம் என்பது  புரிய வேண்டும். தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் புரியாத மொழி. அதை அவர்களால் கிரகிக்க இயலாது. எனவே கேள்விகளின் வழி அறிவாற்றலை அதிகரிக்க இயலாத சூழழில் மனனம் மட்டுமே வழிமுறையாகிவிடும். நான்காவதாக, முந்திய ஆண்டின் யுபிஎஸ்ஆர்  தேர்வில்  அந்தப் பள்ளியின் மலாய்மொழி பாடத்தின் தேர்ச்சி விகிதம், தேசிய தேர்ச்சி விகிதத்தை எட்டியிருக்க வேண்டும் அல்லது அதைவிட கூடுதலாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஜிபிஎஸ் (GPS) 1.85 ஆக இருக்க வேண்டும். எந்தத் தமிழ்பள்ளியும் இந்த அடைவுநிலையை எட்டவில்லை. ஐந்தாவதாக, முழுமையான தகவலுடனும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒப்புதல் கடிதத்துடனும் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதில் எந்த அளவு பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஈடுபட்டது என்பது ஐயப்பாடாகும். தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு, மேற்குறிப்பிட்ட அடைவுநிலைகள் சீர்தூக்கி பார்க்கப்பட்ட பின்னர்  இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. வீட்டில் ஆங்கிலம் பேசும் சில பட்டதாரி பெற்றோர்களின் சுயநலப்போக்கால் அவசரப்பட்டு இந்த முடிவை  தலைமையாசிரியர் எடுத்திருக்கக்கூடிய வாய்ப்புண்டு, அல்லது மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக அவர் இப்படிச் செய்திருக்கலாம். எங்களின் கோரிக்கை: இந்த இருமொழித் திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு உகந்ததல்ல. தமிழ்ப்பள்ளியில் பயிலும் பெரும்பான்மையான (90 விழுக்காட்டிற்கும் அதிகமான) மாணவர்கள் இந்தத் திட்டத்தின் அமலாக்கத்தால் பாதிப்படைவர். குறிப்பாக தமிழ் பேசும் கீழ்தட்டு 40 (B40) மக்களின் குழந்தைகள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி பின் தள்ளப்படுவர். பிபிஎஸ்எம்ஐ (PPSMI) அமலாக்கத்தின் மீளாய்வு (2008) இதைத்தான் பரிந்திரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1. கல்வி அமைச்சு உடனடியாக தமிழ்ப்பள்ளிகளுக்கு அளித்திருக்கும் டிஎல்பி (DLP) திட்டத்திற்கான அனுமதிகளை இரத்து செய்ய வேண்டும். 2. இதில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களையும்,  பெற்றோர் ஆசிரியர் சங்கங்களையும் விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். 3. இருமொழித் திட்டம் வேண்டும் என கோரும் பெற்றோர்களுக்கு பல்லின மாணவர்கள் பயிலும் வகையில் தேசியப்பள்ளிகளை உருவாக்க வேண்டும். அதில் தமிழ்மொழியை ஒரு தேர்வு மொழியாக வழங்க வேண்டும். 4. அரசாங்கம் தேசிய கல்விக்கொள்கை வழி அறிமுகப்படுத்தியுள்ள MBMMBI என்ற மலாய் மற்றும் ஆங்கில மொழிகளை வளப்படுத்தும் கொள்கையை தமிழ்ப் பள்ளிகளில் அமுலாக்கம் செய்ய வேண்டும். இது சார்பான ஒரு குறிப்பானை கல்வி அமைச்சிடம் சமர்பிக்கப்படும் என்றார் இந்த நிகழ்வை வழி நடத்திய வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.

Read more about DLP ISSUE